எம்ப்ரேர் விமான வழக்கு: விபின் கன்னா முக்கிய குற்றவாளி -சிபிஐ

எம்ப்ரேர் விமான ஒப்பந்ததில் லஞ்சம் பணம் 208 மில்லியன் யுஎஸ் டாலர் கைமாறி இருப்பதாக சிபிஐ எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் என்.ஆர்.ஐ பாதுகாப்பு ஆலோசகர் விபின் கன்னாவை முக்கிய குற்ற்றவாளி என்று சிபிஐ கூறியுள்ளது. 

Last Updated : Oct 21, 2016, 02:10 PM IST
எம்ப்ரேர் விமான வழக்கு: விபின் கன்னா முக்கிய குற்றவாளி -சிபிஐ  title=

புதுதில்லி: எம்ப்ரேர் விமான ஒப்பந்ததில் லஞ்சம் பணம் 208 மில்லியன் யுஎஸ் டாலர் கைமாறி இருப்பதாக சிபிஐ எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் என்.ஆர்.ஐ பாதுகாப்பு ஆலோசகர் விபின் கன்னாவை முக்கிய குற்ற்றவாளி என்று சிபிஐ கூறியுள்ளது. 

எம்ப்ரேர் விமானம் வாங்குவதற்காக பிரேசில் நாட்டு நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தில், ஊழல் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கோரியிருந்தார். அதன்படி சிபிஐ, விபின் கன்னாவை முக்கிய குற்ற்றவாளி என்றும் லஞ்சம் பணம் 208 மில்லியன் யுஎஸ் டாலர் கைமாறி இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளது.

கடந்த 2008ம் ஆண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில், பிரேசில் விமான தயாரிப்பு நிறுவனமான எம்ப்ரேருடன், பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் ஆராய்ச்சி அமைப்பான டி.ஆர்.டி.ஓ ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது. அதன்படி சுமார் 20.8 கோடி டாலர் விலையில் 3 விமானங்களை இந்திய வாங்க ஒப்பந்தமானது.

இந்நிலையில், எம்ப்ரேர் நிறுவனம், ஒப்பந்தங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக லஞ்சம் கொடுத்தது குறித்து அமெரிக்க நீதித்துறை விசாரணை நடத்தியது. இதையடுத்து, இந்தியாவுடன் அந்த நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்ததால் சிபிஐ விசாரணை நடத்தும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியிருந்தார். எம்ப்ரேர் விமான ஒப்பந்ததில் லஞ்சம் பணம் 208 மில்லியன் யுஎஸ் டாலர் கைமாறி இருப்பதாக சிபிஐ கண்டுபிடித்துள்ளது. 

 

Trending News