பிப்ரவரி 29 வரை நிறுத்திவைக்கப்பட்டது விவசாயிகள் போராட்டம்

Farmers Protest: பிப்ரவரி 29ஆம் தேதி வரை போராட்டங்களை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். டெல்லி சலோ பேரணி குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பிப்ரவரி 29ஆம் தேதி எடுக்கப்படும் என்று நேற்று மாலை விவசாய தலைவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 24, 2024, 08:52 AM IST
  • பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
  • அவர்களது பெரும்பாலான கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
  • எனினும், மூன்று முக்கிய கோரிக்கைகளில் இன்னும் எந்த நிலைப்பாடும் எட்டப்படவில்லை.
பிப்ரவரி 29 வரை நிறுத்திவைக்கப்பட்டது விவசாயிகள் போராட்டம் title=

Farmers Protest: டெல்லி எல்லையில் பல வித கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் புதன்கிழமை அன்று இள விவசாயி ஒருவர் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் உயிரிழந்தார். இந்த வன்முறையில் சுமார் 30 காவல் துறையினரும் காயப்பட்டனர். இதை அடுத்து விவசாயிகள் சங்க தலைவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு போராட்டம் மற்றும் டெல்லியை நோக்கிய தங்கள் பேரணியை நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர்கள் பிப்ரவரி 29ஆம் தேதி வரை போராட்டங்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர். டெல்லி சலோ பேரணி குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பிப்ரவரி 29ஆம் தேதி எடுக்கப்படும் என்று நேற்று மாலை விவசாய தலைவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர். இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வரும் சம்யுக்த கிசான் மூச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மூச்சா ஆகிய விவசாய சங்கங்கள் அடுத்த வாரத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டனர். அதுவரை விவசாயிகள் பஞ்சாப் ஹரியானா எல்லையில் ஷம்பு கல்லூரி பகுதியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் விவசாய சங்கங்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான பல சந்திப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளன.

விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன?

பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது பெரும்பாலான கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், மூன்று முக்கிய கோரிக்கைகளில் இன்னும் எந்த நிலைப்பாடும் எட்டப்படவில்லை.

- பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (Minimum Support Price - MSP) ஒரு சட்டம்

- விவசாயக் கடன் தள்ளுபடி (Farmers Loan Waiver)

- சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல் 

மேலும் படிக்க | முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் ரத்து! அதிரடி நடவடிக்கை எடுத்த அசாம் அரசு!

இதற்கிடையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு (Central Government) மூன்று அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். விவசாயிகள் நலனில் அரசு அதிகப்படியான அக்கறை கொண்டுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி இதற்காக தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார். 'பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் விவசாயிகளுக்காக செய்துள்ள நற்பணிகளின் பட்டியலை என்னால் காட்ட முடியும். விவசாயிகள் நலனுக்காக அவர் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சிறுரு விவசாயிகள் மீதும் அவர் அதிகப்படியான அக்கறை காட்டுகிறார்' என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.

உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு

கானௌரி எல்லையில் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் உயிரிழந்த விவசாயி சுபாகரன் சிங்கின் சகோதரிக்கு ரூ.1 கோடி இழப்பீடும் அரசு வேலையும் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். விவசாயியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர், இதற்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஐபிஎல் ஓகே... மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News