டெல்லியில் விவசாயிகள் தற்கொலை முயற்சி!

Last Updated : Mar 25, 2017, 02:24 PM IST
டெல்லியில் விவசாயிகள் தற்கொலை முயற்சி! title=

டெல்லியில் தொடர்ந்து 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் தமிழக விவசாயிகள். 

டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் இருவர் மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விளை பொருட்களுக்கு நியாயமான விலை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. அந்த சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு தமிழக விவசாயிகள் மீது கொண்டுள்ள விரோதபோக்கினை கைவிட வலியுறுத்தி டெல்லியில் 12வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

12-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் இவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு கட்டங்களில் போராட்டம் நடத்தி வந்தனர். முதலாவதாக மரத்தில் ஏறி தூக்குப்போடுவது, பிச்சைஎடுப்பது, தெருவில் படுத்து புரள்வது, மொட்டையடிப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். 

நடிகர் விஷால் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று தற்கொலை முயற்சியை கைவிட்டனர். போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளை மத்திய அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று மரத்தில் ஏறி போராட்டம் நடத்திய விவசாயிகளில் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். 

இந்நிலையில் விஷாலின் வேண்டுகோளை ஏற்று விவசாயிகள் மரத்தில் இருந்து கீழே இறங்கினர். 

Trending News