POCSO Act Against Former CM BS Yediyurappa: மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் பலாத்காரம் செய்யப்பட்டதாக பெங்களூர் சதாசிவநகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் எடியூரப்பா மீது சதாசிவநகர் போலீஸார் போக்சோ மற்றும் 354 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பிப்ரவரி 2-ம் தேதி உதவிக்காக சென்றபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பாதிக்கப்பட்ட பெண் எப்ஐஆரில் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இம்முறையும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் களமிறங்கும் எடியூரப்பா, தேர்தல் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார். இதற்கிடையில், போக்ஸோ வழக்கு பதிவு எடியூரப்பாவை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இந்த வழக்கில் கைது மிரட்டலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
53 பேர் மீது புகார் அளித்த பெண்
மூத்த போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என மொத்தம் 53 பேர் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சதாசிவநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தற்போது வரை, எடியூரப்பா தரப்பில் இருந்து இம்த குற்றச்சாட்டுகள் குறித்து பகிரங்க அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. 2008 மற்றும் 2011 க்கு இடையில், மே 2018 இல் குறுகிய காலத்திற்கு, ஜூலை 2019 முதல் 2021 வரை என பிஎஸ். எடியூரப்பா பல முறை கர்நாடக முதல்வராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மம்தா பானர்ஜிக்கு படுகாயம் - முகம் முழுவதும் ரத்தம்... அதிர்ச்சி!
விசாரணை தொடங்கியுள்ளது: உள்துறை அமைச்சர்
இது குறித்து பேசிய உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, காவல்துறை விசாரணையை துவக்கியுள்ளதாக கூறினார். "புகார் அளித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. விசாரணைக்கு பிறகே முழுமையான உண்மை என்ன என தெரியவரும்" என்று அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பரமேஸ்வரா, ஒரு மூத்த அரசியல்வாதி, முன்னாள் முதல்வர் ஒருவரின் ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு இந்த பிரச்சினையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "காவல்துறையினர் புகாரைப் பெற்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணை முடியும் வரை எங்களால் எந்த அறிக்கையும் வெளியிட முடியாது. விசாரணை முடிந்த பிறகுதான் கருத்து தெரிவிக்க முடியும். முழுமையான விசாரணை நடத்தாமல் நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
புகார் அளித்த பெண் மற்றும் அவரது மகளுக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, தற்போது அது தேவையில்லை என உள்துறை அமைச்சர் தெரிவித்தார். “தேவைப்பட்டால், அந்தப் பெண்ணுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார். இந்த விசாரணையின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும் படிக்க | தேர்தல் பத்திரம் விவரங்கள் வெளியீடு... சந்தேகத்தை கிளப்பும் நன்கொடைகள்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ