மத்திய அரசின் ரூ.500 மானியம்... பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?

கொரோனா நெருக்கடியின் மத்தியில், மோடி தலைமையிலான மத்திய அரசு திங்கள்கிழமை முதல் பொதுமக்கள் கணக்கில் ரூ.500 பணத்தை இரண்டாம் தவணையாக செலுத்த உள்ளது

Last Updated : May 3, 2020, 07:24 AM IST
மத்திய அரசின் ரூ.500 மானியம்... பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? title=

கொரோனா நெருக்கடியின் மத்தியில், மோடி தலைமையிலான மத்திய அரசு திங்கள்கிழமை முதல் பொதுமக்கள் கணக்கில் ரூ.500 பணத்தை இரண்டாம் தவணையாக செலுத்த உள்ளது

கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் காரணமாக, நாட்டில் மீண்டும் பூட்டுதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பின் படி தற்போது முழு அடைப்பு வரும் மே 17 வரை தொடரும். 

இந்த நெருக்கடியின் மத்தியில், மோடி தலைமையிலான மத்திய அரசு திங்கள்கிழமை முதல் பொதுமக்கள் கணக்கில் ரூ.500 பணத்தை இரண்டாம் தவணையாக செலுத்த உள்ளது. இந்த தவணை பெண்கள் "ஜன தன்" கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு உதவ ஏப்ரல் முதல் மூன்று மாதங்களுக்கு மாதம் ரூ.500 மானியம் வழங்குவதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது. கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தகவலை அளித்து, நிதி சேவைகளின் செயலாளர் தேவாஷிஷ் பாண்டா, பயனாளிகளுக்கு இந்த பணத்தை கணக்கில் இருந்து திரும்பப் பெற கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, அவர்கள் வங்கி பிராண்டு அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு (CSP) சென்று பணம் எடுக்கலாம். இந்த பணத்தை ATM-கள் மூலமாகவும் எடுக்கலாம்.

மேலும் வங்கி கிளைகளில் கூட்டம் சேர வேண்டாம் எனவும், இந்த தொகை ஐந்து நாட்களில் கணக்கு வைக்கப்படும் எனவும் தேவாஷிஷ் பாண்டா தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த நடவடிக்கை சமூக தூர வழிகாட்டுதல்களுக்கு இணங்க உதவும். நிலையான அட்டவணையின்படி, இந்த பணம் முதற்கட்டமாக ஜன தன் கணக்கின் கடைசி இலக்க பூஜ்ஜியம் மற்றும் ஒன்று எனவும் உள்ள பெண்களின் கணக்குகளுக்கு மாற்றப்படும். கடைசி இலக்கங்கள் இரண்டு மற்றும் மூன்று என்றால், அவர்கள் மே 5 அன்று தங்கள் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News