நாளை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அன்னை லஷ்மியின் அருள் மழை, லாபம், பண வரவு

Sukran Peyarchi Palangal: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 6, 2024, 11:17 AM IST
  • சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கூடும்.
  • தொழிலில் வெற்றியும், வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும்.
நாளை சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அன்னை லஷ்மியின் அருள் மழை, லாபம், பண வரவு

Sukran Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. சில நேரங்களில் ஒரே ராசியில் பல கிரகங்களின் சேர்க்கையும் ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட கிரக சேர்க்கைகளால் பல்வேறு வகையான ராஜயோகங்களும் உருவாகின்றன.

Add Zee News as a Preferred Source

சுக்கிரன் நவம்பர் 7 ஆம் தேதி, அதாவது நாளை, தனுசு ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். அவர் டிசம்பர் 28ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். இதன் காரணமாக பரிவர்த்தனை ராஜயோகம் உருவாகிறது. சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். இவர்கள் பண மழையில் நனைவார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries): 

சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்களை அள்ளித்தரும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்கார்ரகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளிநாட்டில் தொழில் செய்பவர்கள் அதிக லாபம் ஈட்டலாம். நிதி நிலைமை மேம்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் துறையில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவையும் நீங்கள் பெறலாம். வியாபாரம் செய்பவர்கள் பல நன்மைகளைப் பெறலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும்.

மிதுனம் (Gemini): 

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அதிர்ஷ்டமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவழிப்பீர்கள். நிதி நிலை நன்றாக இருக்கும். வியாபாரத்தில் புதிதாக ஏதாவது செய்ய திட்டமிட்டால் அதில் இப்போது வெற்றி கிடைக்கும். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் சிறப்புப் பலன்களைப் பெறுவார்கள். 

மேலும் படிக்க | சனியன் மாற்றத்தால் ஆதாயம் அடையும் 5 ராசிகள்! பண மழை பொழியும்!

சிம்மம் (Leo): 

சுக்கிரனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். அரசு வேலை கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். பண வரவு அதிகமாகும். நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும். தொழில் துறையிலும் பல நன்மைகள் ஏற்படும்.

கன்னி (Virgo): 

சுக்கிரன் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகள் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும். வீடு, வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

விருச்சிகம் (Scorpio): 

சுக்கிரன் பெயர்ச்சியால்  உருவாகும் ராஜயோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கூடும். தொழிலில் வெற்றியும், வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும். பணம் தொடர்பான அனைத்து வகையான பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் பெறலாம். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி... ஷஷ ராஜயோகத்தினால்... கார்த்திகை முதல் இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News