'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம்; மத்திய அரசு தீவிரம்...

நாட்டில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் பொதுமக்கள் பொருட்களை வாங்கும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

Last Updated : Jun 28, 2019, 10:46 AM IST
'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம்; மத்திய அரசு தீவிரம்... title=

நாட்டில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் பொதுமக்கள் பொருட்களை வாங்கும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

உணவு விநியோக திட்டம் தொடர்பாகவும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காகவும், மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சி தலைவருமான, ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில உணவுத் துறை செயலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய ராம்விலாஸ் பஸ்வான் "நாடு முழுவதும் உள்ள, தேசிய உணவு கழக கிடங்குகளில், போதிய அளவு உணவு பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து, உணவு பொருட்களை விரைவில் விநியோகம் செய்யும் வகையில், 'ஆன்லைன்' வசதி ஏற்படுத்தப்படும். மக்கள், நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலும், பொருட்களை வாங்கும் வகையில், ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

முதற்கட்டமாக தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில், இத்திட்டம், சோதனை ரீதியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நுகர்வோர், ரேஷன் பொருட்களை வாங்க, ஒரு கடையை மட்டும் சார்ந்தில்லாமல் எந்த கடையிலும் வாங்கும் அனுமதி பெறுவர்.

இத்திட்டத்தால், பணி நிமித்தமாக, தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களில் வசிக்கும் ஊழியர்கள், தொழிலாளர்களின் குடும்பத்தினர் பெரிதும் பயனடைவர் என்றும் தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் ஒரு குறிப்பிட்ட ரேஷன் கடையின் பட்டியலில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு தேவையான ரேஷன் பொருட்களே அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது. இதில் பல சமையங்களில் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரேசன் பொருட்கள் வழங்குவதில் பெரும் தட்டுப்பாடு நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் மற்ற ரேசன் கடையினருக்கு இருக்கும் ரேசன் பொருட்களை அளித்துவிட்டாள்?... மத்திய அரசு இத்திடத்தை எப்படி அனுக போகிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Trending News