கோழியால் நின்ற திருமணம்... வாயடைத்துப்போன பெண் வீட்டார்!

விருந்தில் சிக்கன் வகைகள் இல்லை என ஏற்பட்ட பிரச்னையில், மணமகன் வீட்டார் திருமணத்தையே நிறுத்த முடிவுசெய்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 29, 2022, 03:22 PM IST
  • மணமகள் வீட்டார் சைவ உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கமுடையவர்கள்.
  • திருமணத்திற்கு முந்தைய நாள் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
கோழியால் நின்ற திருமணம்... வாயடைத்துப்போன பெண் வீட்டார்! title=

திருமணத்தை செய்து பார்... வீட்டை கட்டிப்பார்.. என்ற சொலவடையை கேட்காதவர்கள் மிகச்சிலரே. அந்த அளவிற்கு ஒரு திருமணத்தை நடத்துவது சிரமமான ஒன்றுதான். சடங்கு, சம்பிரதாயம், உறவின் முறை அழைப்பு போன்ற பல விவகாரங்களும், பிரச்னைகளும் சேர்ந்ததுதான் திருமணம்.

அப்படியிருக்க, அந்த திருமணத்தை எப்படியாவது வெற்றிகரமாக, எந்த குறையும் இல்லாமல் நடத்தி முடித்திட வேண்டும் என்பதைதான் இருவீட்டார் நினைப்பார்கள். ஆனால், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், திருமணத்திற்கு முந்தயை நாள் உணவில் சிக்கன் வகைகளை பெண் வீட்டார் ஏற்பாடு செய்யவில்லை என்பதற்காக மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணமகன் தெலங்கானாவின் ஜகத்கிரிகுட்டா ரிங்பஸ்தி பகுதியையும், மணமகள் பிகாரின் மார்வாடி குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தெரிகிறது. இவர்களுக்கு, நேற்று (நவ. 28) திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் (நவ. 27) இரவு, மணமகள் வீட்டார் விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். இந்த விருந்து ஹைதராபாத்தின் ஷாபூர்நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. 

மேலும் படிக்க | வழக்கை ஒத்திவைத்த நீதிபதி... கத்தியை காட்டிய குற்றவாளி - நீதிமன்றத்தில் பரபரப்பு

மணப்பெண் வீட்டார், சைவ உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் என்பதால், விருந்தில் அசைவ உணவுகளை குறிப்பாக சிக்கன் வகைகளை ஏற்பாட செய்யவில்ல. எந்த பிரச்சனையும் இன்றி சென்றுகொண்டிருந்த இந்த விருந்தில், மாப்பிள்ளையின் நண்பர்கள் கடைசி பந்தியில் உணவருந்த வந்துள்ளனர். அப்போது, அவர்கள் அசைவ உணவு பரிமாறப்படாதது குறித்து கத்தி கூப்பாடு போட்டுள்ளனர். உடனே அங்கு வந்த பெண் வீட்டார் பிரச்னை குறித்து கேட்டறிந்துள்ளனர். 

விருந்தில் அசைவ உணவு இல்லை என மாப்பிள்ளையின் நண்பர்கள் கூறுவதை கேட்ட பெண் வீட்டார், அவர்களை சமாளிக்க முயன்றுள்ளனர். இருப்பினும், மாப்பிள்ளை நண்பர்கள் உணவருந்தாமல், கோபப்பட்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறினர். 

நண்பர்கள் உணவருந்தாமல் செல்வதை கண்ட மாப்பிள்ளையும், அவரது குடும்பத்தினரும் பெண் வீட்டாரிடம் பிரச்னை செய்துள்ளனர். விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து, அந்த திருமணத்தை நிறுத்தும் முடிவுக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டனர். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் என்ன செய்வது என்று அறியாமல் பதற்றமடைந்துள்ளனர். 

பின்னர், உடனடியாக இதுகுறித்து, அப்பகுதியில் இருந்த காவல் நிலையத்தை அணுகி, பிரச்னை குறித்து விவரித்துள்ளனர். அங்கிருந்த காவல் ஆய்வாளர், இருவீட்டாரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டியதை அடுத்து மீண்டும் அந்த திருமணத்தை நடத்த மணமகன் வீட்டார் சம்மத்தித்துள்ளனர். 

பின்னர், இரு வீட்டாரும் கலந்து பேசி, நவ. 30ஆம் தேதியே (நாளை) திருமணத்தை நடத்தலாம் என முடிவெடுத்துள்ளனர். வரதட்சனை, காதல் விவகாரம் என பல்வேறு வகையில் திருமணத்தில் இடையூறு வந்திருந்தாலும், உணவில் சிக்கன் இல்லை என்று இடையூறு வருவது என்பது சற்று அரிதுதான். 

மேலும் படிக்க | இஸ்லாமிய வெறுப்பு உங்களுக்கு விளையாட்டா? - வகுப்பறையில் ஆசிரியருக்கு பாடம் எடுத்த மாணவர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News