ஆர்எஸ்எஸ் கொள்கையின் தீமைகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி: ப சிதம்பரம்!

காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று ப சிதம்பரம் தெரிவித்து உள்ளார்!

Last Updated : Jun 8, 2018, 11:55 AM IST
ஆர்எஸ்எஸ் கொள்கையின் தீமைகளை சுட்டிக்காட்டியதற்கு நன்றி: ப சிதம்பரம்!

மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடந்தது. மராட்டிய மாநிலம், நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கக் கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும். மத ரீதியாகவோ, சித்தாந்த ரீதியாகவோ இந்தியாவை அடையாளப்படுத்த முயன்றாலும், சகிப்புத்தன்மை இல்லை என்றாலும் அது நாட்டுக்கு சீர்குலைவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும் என்று தெரிவித்தார்.

பிரணாப் முகர்ஜியின் உரைக்கு பிறகு, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட காங்கிரஸ் அவரது கருத்தை வரவேற்கும் வகையில் கருத்து தெரிவித்தது.

இந்த நிலையில், இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்...! ஆர்ஸ்ஸ் கொள்கையின் தீமைகளை அவருடைய பாணியில் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியதற்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், காங்கிரஸ் கொள்கைகள் சரி என்பதை ஆர்எஸ்எஸ்க்கு பிரணாப் தெரிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்து உள்ளார். 

More Stories

Trending News