ஹரியானா தேர்தல் : ஆம்ஆத்மியின் 5 முக்கிய வாக்குறுதிகள்! மின்சாரம் இலவசம், பெண்களுக்கு 1000 ரூபாய்

Haryana Elections: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்பில் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், இலவச மின்சாரம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 20, 2024, 10:45 PM IST
  • ஹரியானா மாநிலத்துக்கான சட்டப்பேரவை தேர்தல்
  • இலவச மின்சாரம், 1000 ரூபாய் உரிமைத் தொகை
  • 5 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்ட ஆம்ஆத்மி கட்சி
ஹரியானா தேர்தல் : ஆம்ஆத்மியின் 5 முக்கிய வாக்குறுதிகள்! மின்சாரம் இலவசம், பெண்களுக்கு 1000 ரூபாய் title=

ஆம்ஆத்மி கட்சி வாக்குறுதி

90 தொகுதிகளைக் கொண்ட ஹரியான சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், ஆம்ஆத்மி கட்சி 5  முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், இலவச மின்சாரம் ஆகியவை இந்த தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளன. ’கெஜ்ரிவாலின் உத்தரவாதம்’ என்ற பெயரில் ஆம்ஆத்மி கட்சியின் இந்த தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், அம்மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | UPSC தலைவர் திடீர் ராஜினாமா... பூஜா கேட்கர் ஐஏஎஸ் சர்ச்சை தான் காரணமா...?

பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்ற ஆம்ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் கலந்து கொள்ள, அவருடன் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த்சிங் மான், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், சந்தீப் பதக் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, ஹரியான மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆம்ஆத்மி கட்சியின் வாக்குறுதிகளை டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் வெளியிட்டார். அந்த உத்தரவாதங்கள் என்னவென்றால் இலவச மின்சாரம், மாதம்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உடன், உயர்தர மருத்துவ சிகிச்சை, தரமான கல்வி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகிய வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. 

சுனிதா கெஜ்ரிவால் ஆவேச பேச்சு

ஹரியானா மாநிலத்துக்கான ஆம்ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பேசிய கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், " அரவிந்த் கெஜ்ரிவால் ஹரியானா மாநிலம் ஹிசாரில் வளர்ந்தவர். அவர் நாட்டின் தலைநகரை ஆள்வான் என்று யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இது ஒரு சிறிய விஷயம் அல்ல. இது ஒரு அதிசயத்திற்கு நிகரான சாதனை. அவர் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறார். டெல்லியில் கல்வி, குடிநீர் என அடிப்படை வசதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை ஆம்ஆத்மி கட்சி உறுதி செய்திருக்கிறது. அதேபோன்ற சிறப்பான ஆட்சியை ஹரியானாவுக்கும் ஆம்ஆத்மி வழங்கும்" என பேசினார். 

ஆம்ஆத்மி கட்சியின் அடுத்த குறி

பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த ஆம்ஆத்மி கட்சி, அடுத்ததாக இப்போது ஹரியான மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் தனித்து களம் காண இருக்கிறது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஆம்ஆத்மி இருந்தாலும், கூட்டணி ஏதும் இல்லாமலேயே சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஹரியானா மாநில தேர்தலில் தனித்து களம் காண இருப்பதால் அங்கு போட்டி பலமாகியுள்ளது.  

மேலும் படிக்க | மைக்ரோசாஃப்ட் பிரச்சினை... விமான நிலையங்களில் பாதிப்பு சீரடைந்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News