Home gardening Tips : அத்திப்பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது. இதனால் தான் தினசரி ஒரு பழத்தையாவது சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் அந்த பழத்தை தினமும் சந்தையில் வாங்கி சாப்பிடுவது காஸ்டிலியான ஒன்று தான். ஏனென்றால் அத்தி பழம் விலை கூடுதலாக இருக்கிறது. இதனால், நீங்கள் உங்கள் வீட்டிலேயே ஒரு அத்தி பழ செடியை வளர்த்துவிட்டால், சில ஆண்டுகளில் பழங்கள் உங்கள் வீட்டிலேயே கிடைக்க தொடங்கிவிடும். ஆரோக்கியத்தில் யாரெல்லாம் கவனம் செலுத்துகிறார்களோ, அவர்கள் எல்லாம் இந்த வாழ்க்கையை எந்த ரணமும் இல்லாம் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கழிப்பார்கள். அந்த வரம் இந்த வாழ்வில் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் அத்திபழ செடி ஒன்றை வளருங்கள்.
மேலும் படிக்க | மாதவிடாய் காலத்தில் பூக்களை பெண்கள் பறிக்கக்கூடாதா? ஊறுகாய் கெட்டுபோகுமா?
அத்திபழ செடியை நடும் முறை
நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு அத்தி செடியை நட விரும்பினால், உங்களுக்கு விதைகள், பானை, உரம், தண்ணீர் மற்றும் மண் இருந்தால் போதும். நல்ல அத்தி விதைகளை அருகில் இருக்கும் விவசாய விதைகள் விற்பனை கூடத்துக்கு சென்று வாங்கலாம். அங்கேயே, பானை, மண் மற்றும் உரங்கள் எல்லாம் கூட விற்பனை செய்வார்கள். இதனை வாங்கி வந்த பின்னர், முதலில், செடியை நடும் மண்ணை ஒருநாள் சூரிய ஒளியில் காய வைக்க வேண்டும். அடுத்தநாள் அந்த மண்ணுடன் எருவைக் கொட்டிக் கலக்கவும். இதன்பிறகு அந்த மண்ணை எடுத்து பானையில் முக்கால்வாசிக்கு நிரப்புங்கள். இப்போது அத்திச் செடி விதையை எடுத்து மண்ணுக்குள் இரண்டு அங்குல ஆழத்துக்குள் ஊன்றுவிடுங்கள். கடைசியாக பானைக்குள் தண்ணீரை மிகவும் ஈரப்பதமாக இருக்குமாறு தெளித்து, குளிர்ந்த இடத்தில் வைத்துவிடுங்கள்.
அத்தி பழச் செடியை கவனிக்கும் முறை
இப்போது பானைக்குள் ஊன்றியிருக்கும் விதை முளைக்கும் வரை ஈரப்பதம் இருக்குமாறு கவனித்துக் கொள்ளுங்கள். செடி வளர்ந்துவிட்டால் 3 முதல் 4 அடி வரை வளரும் வரை தொடர்ச்சியாக நீர் ஊற்றி பாதுகாத்து வளருங்கள். அதன்பின்னர் உங்களுக்கு ஏற்ற இடத்தில் நிலத்தில் அந்த செடியை நட்டு வைக்கவும். அடிக்கடி பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்து அத்திச் செடியை பாதுகாப்பாக வளர்க்கவும். குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்குள் அத்தி செடியில் பழங்கள் வரத் தொடங்கும்.
மேலும் படிக்க | 50 வயதிலும் விஜய் Fit-ஆக இருக்க ‘இது’தான் காரணம்!! சீக்ரெட்டை தெரிஞ்சிக்கோங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ