நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து போஸ்ட் பதிவு!

நதிகள் இணைப்பே முதல் பணி எனக் கூறிய நிதின் கட்கரிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

Last Updated : May 26, 2019, 12:36 PM IST
நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து போஸ்ட் பதிவு! title=

நதிகள் இணைப்பே முதல் பணி எனக் கூறிய நிதின் கட்கரிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

 

 

 

கடந்த ஜனவரி மாதம் அமராவதியில் நடந்த கூட்டத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர்  நிதின் கட்கரி பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது,

ஆண்டுதோறும் கோதாவரி நதியில் இருந்து 1100 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் இடையே தண்ணீருக்காக மோதல் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவ்வளவு தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதற்கு நதிகளை இணைக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாராக இருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் 4 தென்மாநிலங்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று கூறியிருந்தார்.

அந்தவகையில் பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து பாஜக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ள நிலையில் நிதின் கட்கரி ‘தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டுவர கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோதாவரி - கிருஷ்ணா நதி இணைப்பே முதல் பணி எனக் கூறிய நிதின் கட்கரிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் பதிவு செய்துள்ளார்.

Trending News