ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்...!
ஜம்மு காஷ்மீரில் சில பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் சிலர் ஜம்மு சோதனைச் சாவடியில் இருந்த போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு, லாரி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பி ஓடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ஒரு ஏகே ரக 47 துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக லாரி டிரைவர் மற்றும் உதவியாளரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், தொடர்ந்து தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்க தீவிர வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
One forest guard was injured after terrorists opened fired at him while they fled from the spot. https://t.co/NzsYCuy3jt
— ANI (@ANI) September 12, 2018
தீவிரவாதிகளின் திடீர் தாக்குதலில் இரண்டு காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். இவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.