நாட்டில் வெகுதொலைவு பயனத்தில் ஈடுபடும் சுமார் 500 ரயில்களின், பயண நேரத்தினை 2 மணி நேரம் வரையில் குறைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது!
நவம்பர் மாத முடிவுக்குள் இதுதொடர்பான ரெயில்வே கால அட்டவணை வெளிகும் என ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் முன்தாக தெரிவித்ததன்படி, பிரபலமான ரயில்களின் பயண நேரத்தை சுமார் 15 நிமிடங்கள் முதல் 2 மணிவரையில் குறைக்க திட்டமிடப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இத்திட்டத்தில் இடம்பெரும் ரயில்களின் பட்டியல்கள் மற்றும் புது கால அட்டவணைகள் விரைவில் பணிமனைகளுக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
புதிய கால அட்டவணையின்படி 50 ரயில்கள் இந்த புது விரைவு திட்டத்தில் பயன்படுத்தப்படும் எனவும். 51 ரயில்களின் பயண கால நேரமானது ஒரு மணி முதல் 3 மணி வரையில் குறையும் எனவும் தெரிவித்தார். மேலும் 500 ரெயில்கள் வரையில் இந்த புது திட்டத்தில் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த புது கால அட்டவணைப்படி போபால-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் 95 நிமிடம் முன்னதாகவே இலக்கினை சென்றடையும். குவஹாத்தி-இந்தூர் சிறப்புப்பாதை ரயிலானது 2,330 கி.மீ. பயணத்தை வழக்கத்தினை விட 115 நிமிடங்கள் முன்னதாக கடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்
இதர ரயில்களிலும் நிரந்தர வேகம் கட்டுப்பாடுகளை மீளாய்வு செய்வதில் ரயில்வே ஆயுத்தமாகியுள்ளது!