இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கப்பதிவு நேற்று காலை 8 மணி முதல் துவங்கி மாலை 5 மணி வரை அமைதியாக நடைபெற்றது. 68 தொகுதிகள் கொண்ட இந்த சட்டசபைக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக வாக்கப்பதிவு நடந்தது.
இந்த நிலையில் 68 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலுக்கான வாக்கப்பதிவு நேற்று சரியாக 8 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தம் 337 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 68 தொகுதிகளிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக போட்டியிட்டனர்.
வாக்கப்பதிவு காலை 8 மணி முதல் துவங்கி மாலை 5 மணி வரை அமைதியாக நடைபெற்றது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்று தெரிந்துக்கொள்ள ஒப்புகை சீட் கொடுக்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவை விட, நேற்று நடைபெற்ற வாக்கப்பதிவில் 74% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 68 தொகுதிகளில், 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தேர்தல் முடிவுகள் வருகிற டிசம்பர் 18-ம் தேதி அறிவிக்கப்படும்.