இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கப்பதிவு நேற்று காலை 8 மணி முதல் துவங்கி மாலை 5 மணி வரை அமைதியாக நடைபெற்றது. 68 தொகுதிகள் கொண்ட இந்த சட்டசபைக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக வாக்கப்பதிவு நடந்தது.
இந்த நிலையில் 68 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலுக்கான வாக்கப்பதிவு நேற்று சரியாக 8 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் மொத்தம் 337 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 68 தொகுதிகளிலும் பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக போட்டியிட்டனர்.
உ.பி. உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பு வெளியானது. இந்த கருத்து கணிப்பில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி முகம் தெரிகிறது. பஞ்சாபில் முதன் முறையாகப் போட்டியிட்ட ஆம் ஆத்மி மற்றும் அதன் எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையில் இழுபறி நிலை வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப் பட்டது. இதில் 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 7-வது மற்றும் இறுதிகட்டமாக 40 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடை பெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.
மணிப்பூரில் மொத்தம் உள்ள 60-ல் 38 தொகுதிகளில் முதல்கட்டமாக கடந்த 4-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 2-வது மற்றும் இறுதிகட்டமாக மீதமுள்ள 22 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.
மணிப்பூர் சட்டசபை தேர்தல் மார்ச் 4-ம் மற்றும் 8-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் பா.ஜ.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் செல்ல உள்ளார்.
பிரதமரின் இந்த பயணத்துக்கு அங்குள்ள புரட்சி அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமரின் வருகையை எதிர்த்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
11 மாவட்டங்களில் உள்ள 67 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஷரன்பூர், பிஜ்னோர், பரேலி, பிலிபிட், லகிம்புர் கெரி ஆகிய முக்கிய தொகுதிகள் இதில் அடக்கம்.
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு நடைபெறும் ஓட்டுப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர்.
பஞ்சாப், கோவாவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
#PunjabPolls2017: ஹர்பஜன் சிங் தனது தாயாருடன் வந்து ஓட்டு போட்டார். அவர் கூறுகையில் " முதலில் பஞ்சாபில் இரண்டு கட்சிகள் இருந்தது. தற்போது தேர்தலில் மூன்று கட்சிகள் போட்டி இடுகின்றன. ஆனால் இந்த தேர்தலில் எந்த கட்சி வென்றி பெற்றாலும் அந்த பஞ்சாப் முன்னேற்றத்துக்காக பாடுபட வேண்டும் என கூறினார்.
பஞ்சாப், கோவாவில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பஞ்சாப்:-
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து இக்கூட்டணியே ஆட்சி செய்து வருகிறது. மேலும் களத்தில் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகளும் உள்ளன.
பஞ்சாப், கோவா மாநிலங்களில் பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பஞ்சாப்:-
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலிதளம், பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து இக்கூட்டணியே ஆட்சி செய்து வருகிறது. மேலும் களத்தில் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகளும் உள்ளன.
முன்னாள் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் சிவ்பால் யாதவ் மார்ச் 11-ம் தேதி உ.பி தேர்தலில் முடிவுகள் அறிவிப்பு பின்னர் ஒரு புதிய கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.