இந்தியாவில் 2022-க்குள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு - ராஜ்நாத் சிங்!

அடுத்த மூன்றாண்டுகளில் அனைத்து குடும்பங்களுக்கும் சொந்த வீடு இருக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்..!

Last Updated : Nov 24, 2019, 05:26 PM IST
இந்தியாவில் 2022-க்குள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு - ராஜ்நாத் சிங்! title=

அடுத்த மூன்றாண்டுகளில் அனைத்து குடும்பங்களுக்கும் சொந்த வீடு இருக்கும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்..!

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது குறித்து பேசுகையில், செவ்வாய்க்கிழமை ஒரு மாடி சோதனைக்கு காத்திருக்கிறது என்று கூறினார். ‘‘முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்ச்சியில், அரசியல் கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை. ஒரு கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பது ஆளுநரின் தனிப்பட்ட உரிமை. அவருக்கு திருப்திகரமாக இருந்ததால், சம்மந்தப்பட்ட நபரை ஆட்சி அமைக்க அவர் அழைப்பு விடுப்பார்,’’ என ராஜ்நாத் சிங் ANI-இடம் கூறினார். 

இது குறித்து, செய்தியாளர்களிடம் கூறுகையில்; "பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானங்கள் அனைத்தும் தீர்க்கமானதாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார். நாடு பாதுகாப்பான ஒருவரிடம் இருந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். இப்போது இந்திய மக்களுக்கு அந்த நிம்மதியை தந்துள்ளார் பிரதமர் மோடி என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், இந்தியா பாதுகாப்பான ஒருவரின் கைகளில் உள்ளதாகவும், அவரின் அரவணைப்பினால் இந்தியா சர்வதேச நாடுகளின் முன்பு தலை நிமிர்ந்து நிற்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள ராஜ்நாத்சிங், ஒவ்வொரு நபருக்கும் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு திட்டமும் அமல்படுத்தப்பட்டிருப்பதாக கூறினார்.

முதலீட்டாளர்களின் பார்வையில், அமெரிக்க என்ற நாடு தான் முதலீடு செய்வதற்கேற்ற நாடாக பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று அமெரிக்காவை பார்க்கும் அனைவரும் இந்தியாவையும் பார்க்கின்றனர். அந்த அளவு இந்தியாவை வளர்ச்சிக்கான பாதையில் கொண்டு சென்றுள்ளார் மோடி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உரையாடலின் போது தேசிய குடியுரிமை பதிவேடு பற்றி முன் வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தான் உள்துறை அமைச்சராக இருந்த போது தொடங்கிய இந்த பணி நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதே நல்லது என்றும், அதன் மூலம் நம் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை அறிய முடியும் என்றும் கூறியுள்ளார். 

மேலும், பாரதிய ஜனதா கட்சி மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் தான் பதவியில் அமருமே தவிர நாற்காலியின் மீதிருக்கும் மோகத்தால் அல்ல என்றும் கூறியுள்ளார். மேலும், 2014 ஆம் ஆண்டு 282 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக 2019 ஆம் ஆண்டு தேர்தலில் 303 இடங்களை வென்றதற்காக தொண்டர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். 

 

Trending News