பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான அமைச்சரவை (Cabinet Expansion) விரிவாக்கம் தொடர்பான ஆலோசனை தொடர்பாக இன்று (ஜூன் 6, செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது, இதில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா உள்ளிட்ட பல மூத்த மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளவிருந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் ( PM Modi) அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு 20 முதல் 22 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 8 தேதி வாக்கில் அமைச்சரவை விரிவாக்கப்படலாம். மத்திய அமைச்சரவையில் தற்போது 53 அமைச்சர்கள் உள்ளனர். விரிவாக்கத்திற்குப் பிறகு 81 அமைச்சர்கள் இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் எதிர்பார்க்கப்படும் இந்த அறிவிப்பில், ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு (Jyotiraditya Scindia) பதவி ஏதும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து அவர் விலகியதன் காரணமாக மத்திய பிரதேசத்தை பிஜேபி (BJP) மீண்டும் ஆட்சி அமைக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
அஸ்ஸாமில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பின்னர் அசாம் முதல்வராக ஹிமாந்த பிஸ்வா சர்மா பதவி ஏற்க வழி விட்ட சர்பானந்தா சோனோவாலுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், நிதின் கட்கரி, டாக்டர் ஹர்ஷ் வர்தன் (Doctor Harsh Vardhan), நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் தற்போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலாகாக்களை வைத்திருக்கும் அமைச்சர்கள் ஆவர்.
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு, மகத்தான வெற்றி பெற்று பதவியேற்றுக் கொண்ட பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படாத நிலையில், தற்போது விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
ALSO READ: உலகின் பழமையான தமிழ் மொழியின் ரசிகன் நான்: பிரதமர் மோடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR