அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. BSF ஜவான் முகாமுக்குள் தனது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1 வீரர் காயமடைந்தார். இதில் துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ வீரரும் உயிரிழந்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 வீரர்கள் மீது துபாக்கி சூடு
அமிர்தசரஸ் BSF முகாமில், BSF வீரர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வீரர்கள் குருநானக் தேவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 6 வீரர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும் படிக்க | கர்நாடக மாநிலத்தின் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து 10 பேர் பலி
BSF ஜவான் துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்?
இருப்பினும், BSF ஜவான் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
5 troops were injured today due to fratricide committed by Ct Satteppa SK at HQ 144 Bn Khasa, Amritsar. Ct Satteppa S K was also injured. Out of the 6 injured, 5 troops incl Ct Satteppa, have lost their lives, one critical. A court of inquiry has been ordered: BSF pic.twitter.com/d17FzAdFkl
— ANI (@ANI) March 6, 2022
நீதிமன்ற விசாரணை உத்தரவு
இந்த சம்பவம் குறித்து பிஎஸ்எஃப் ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது, அதில் இந்த விஷயத்தை விசாரிக்க நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR