LAC பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியா-சீனா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு!!

எல்லையில் பதட்டங்களைக் குறைக்க, இந்தியாவும் சீனாவும் ஐந்து காரணிகளை ஒப்புக் கொண்டுள்ளன..!

Last Updated : Sep 11, 2020, 08:53 AM IST
LAC பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியா-சீனா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு!! title=

எல்லையில் பதட்டங்களைக் குறைக்க, இந்தியாவும் சீனாவும் ஐந்து காரணிகளை ஒப்புக் கொண்டுள்ளன..!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யா மற்றும் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்களை ரஷ்யாவின் மாஸ்கோவில் சந்தித்துள்ளது. LAC-யில் பதட்டங்களைக் குறைக்க இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே5 அம்சத் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கபட்டுள்ளது. வியாழக்கிழமை மாஸ்கோவில் இந்தியா வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் (S Jaishankar) மற்றும் சீன வெளியுறவு மந்திரி வாங் யி இடையே நடந்த சந்திப்பின் போது ஐந்து விடயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டன.

எல்லையில் பதட்டங்களைக் குறைப்பதற்கான ஐந்து அம்ச நிகழ்ச்சி நிரல் இரு தலைவர்களுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜீ நியூஸ் இணை சேனல் WION இடம் ஒரு உயர் அரசாங்க வட்டாரம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஒரு கூட்டு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு சென்றார். இந்த கூட்டத்தின் நடுவே அவர் தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களை அடுத்தடுத்து சந்தித்து, இரு தரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசினார்.

ALSO READ | கடனே வாங்காத வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கும் SBI..

அதைத் தொடர்ந்து, ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ரிக்’ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தை ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் நடத்தினார். இதில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், லடாக் மோதல் வலுத்து வருகிற நிலையில் சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இருதரப்பிலும் நடைபெற்ற வெளிப்படையான, ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையின் முடிவில் 5 அம்சத்திட்டத்துக்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்தனர்.

அதாவது, “எல்லையில் தற்போது உள்ள சூழ்நிலை இருதரப்புக்கும் உகந்ததாக இல்லை. எனவே இருதரப்பு எல்லை படைகளும் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட வேண்டும். விரைவில் படைகளை வாபஸ் பெற்று, இருதரப்பினரும் முறையான இடைவெளிடைப்பிடித்து பதற்றத்தை தணிக்க வேண்டும். 

ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளை பின்பற்றி எல்லைப் பிரச்சினையில் கருத்தொற்றுமை கொண்டு இந்திய - சீன உறவுகளை பலப்படுத்த வேண்டும். வேறுபாடுகள் தகராறுகளாக மாறாமல் தடுக்க வேண்டும்.

எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் எந்த ஒரு செயலிலும் இருதரப்பினரும் ஈடுபடக்கூடாது. எல்லையில் பதற்றம் தணிந்த பிறகு இருநாடுகளுக்கு இடையேயும் நம்பிக்கை வளர்ப்பதற்கான புதிய அளவுகோல்களை செயல்படுத்த வேண்டும்.

மேலும் சிறப்புப் பிரதிநிதிகள் மூலம் இருநாடுகளும் தொடர்ந்து உரையாடல் நடத்த வேண்டும், இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை நடைமுறைகள் இருதரப்பு கூட்டங்களில், சந்திப்புகளில் தொடர்ந்து நடைபெற வேண்டும்” என்று இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News