புதுடெல்லி: ZEE NEWS இன் தேசியவாதத்தின் #IndiaKaDNA என்ற மிகப்பெரிய மேடையில் மாபெரும் அரசியல் விவாதத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் (Prakash Javadekar), "நாட்டின் எதிர்கட்சி எந்த திசையில் செல்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை". 'எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி. இருக்கக்கூடாது என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இரண்டுமே ஜனநாயகத்தில் பங்கு வகிக்கின்றன என்று கூறினார்.
மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது தொடர்பாக பாஜக (BJP) மற்றும் சிவசேனா (Shiv Sena) இடையேயான இழுபறி குறித்து பிரகாஷ் ஜவடேகரிடம் கேட்டபொழுது, மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சியின் அடாசு அமைக்கும் என்றும், தேவேந்திர ஃபட்னாவிஸ் மட்டுமே முதல்வராக இருப்பார் என்றும் கூறினார். மேலும் சிவசேனாவுடனான எங்கள் நட்பு இன்னும் முடிவடையவில்லை என்றும் தெளிவுப்படுத்தினார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியின் திட்டங்களைப் பற்றி கருத்துக் கூற விரும்பினால், அதைப் பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் விவாதத்திலிருந்து தப்பி ஓட பார்க்கிறார்கள் என்றார். ஜனநாயகத்தின் நன்மை என்னவென்றால், அதிகாரமும், எதிர்க்கட்சியும் அந்தந்த வழிகளின்படி தொடர வேண்டும். அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டால் எதிர்க்கட்சி அதை ஆதரிக்கிறது, அரசாங்கம் தவறு செய்தால் எதிர்க்கட்சி அதை விமர்சிக்கிறது என்றும் கூறினார்.
பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "இப்போது நாடு முழுவதும் ஒற்றுமையின் சூழல் ஏற்பட்டு உள்ளது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் மக்களுக்கு விருப்பம் உள்ளது என்றார். ஒற்றுமை ஏந்திய உணர்வு மக்களிடையே உருவாகியுள்ளது என்றார்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் செல்ல யாருக்கும் எந்த தடையும் இல்லை என்று பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இரண்டு முன்னாள் முதலமைச்சர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரும் தடை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அதுவும் நீண்ட காலத்திற்கு இல்லை. நாட்டின் எந்தவொரு குடிமகனும் காஷ்மீர் செல்ல சுதந்திரம் உள்ளது, இது இன்றைய உண்மை என்றும் கூறினார்.