டெல்லியிலிருந்து இயங்கும் தொழிலாளர் சிறப்பு ரயில்கள் ரத்து; காரணம் என்ன?

டெல்லியில் இருந்து இயங்கும் தொழிலாளர் சிறப்பு ரயில்களின் செயல்பாட்டை இந்திய ரயில்வே நிறுத்தியுள்ளது. 

Last Updated : Jun 4, 2020, 06:35 AM IST
  • இந்த சிறப்பு ரயில்கள் டெல்லியில் இருந்து இயக்கப்படாது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
  • டெல்லி அரசின் கோரிக்கை இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • இந்திய ரயில்வே மே 1 முதல் ஜூன் 2 வரை 4155 தொழிலாளர் ரயில்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியிலிருந்து இயங்கும் தொழிலாளர் சிறப்பு ரயில்கள் ரத்து; காரணம் என்ன? title=

டெல்லியில் இருந்து இயங்கும் தொழிலாளர் சிறப்பு ரயில்களின் செயல்பாட்டை இந்திய ரயில்வே நிறுத்தியுள்ளது. 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு அல்லது சொந்த மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஆனால் இப்போது இந்த ரயில்கள் டெல்லியில் இருந்து இயக்கப்படாது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. டெல்லி அரசின் கோரிக்கை இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய ரயில்வே மே 1 முதல் ஜூன் 2 வரை 4155 தொழிலாளர் ரயில்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

READ | புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர சிறப்பு ரயில் தேவை -தாக்கரே...

தகவல்களின்படி, ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கான முடிவை ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், டெல்லி அரசிடமிருந்து புதிய கோரிக்கை வந்தால், சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

டெல்லியில் இருந்து கடைசி மூன்று தொழிலாளர் ரயில்கள் மே 31 அன்று இயக்கப்பட்டன. இவற்றில், ஆனந்த் விஹார் ரயில் நிலையத்திலிருந்து பூர்னியா, பாகல்பூர் மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையம் முதல் மஹோபா வரை ரயில்கள் இயக்கப்பட்டன. ஜூன் மாதத்தில் டெல்லியில் இருந்து ரயில்கள் ஏதும் இயக்கப்படவில்லை.

READ | புலம்பெயர்ந்தோருக்கு அடுத்த 2 மாதத்திற்கு இலவச உணவு தானிய விநியோகம்...

மே 1 முதல் டெல்லியில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து 242 ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 101 ரயில்கள் உத்தரபிரதேசத்திற்கும், 111 ரயில்களும் பீகாருக்கும் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

  • 256 ரயில்கள் ரத்து...

இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, மே 1 முதல் மே 31 வரை 4040 தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நேரத்தில், 256 ரயில்களும் பல்வேறு மாநிலங்களால் ரத்து செய்யப்பட்டன. ரயில்களை ரத்து செய்வதில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் முன்னணியில் இருந்தன.

தரவுகளின்படி, 105 ரயில்களை மகாராஷ்டிரா, 47 குஜராத், 38 கர்நாடகா மற்றும் 30 ரயில்களை உத்தரபிரதேசம் ரத்து செய்துள்ளன.

READ | புலம்பெயர்ந்தோரின் குரலை பிரதிபலிக்கும் SpeakUp பிரச்சாரம்; காங்கிரஸின் புது முயற்சி!

மே 1 முதல் ஜூன் 2 வரை ரயில்வே 4155 தொழிலாளர் ரயில்களை இயக்கியுள்ளது. இவற்றில் 4115 ரயில்கள் தங்கள் பயணங்களை முடித்துள்ளன. 81 ரயில்கள் செல்லும் வழியில் உள்ளன. 57 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இந்தியன் ரயில்வே தனது ரயில்கள் மூலம் அவர்களது சொந்த மாநிலத்திற்கு கொண்டு சென்றுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News