வரலாற்றில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து, இந்த சரிவு கடந்த மாதம் துவங்கி இன்று வரை தொடர்கிறது. ஒருபக்கம் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், மறுபக்கம் எண்ணெய் மற்றும் காஸ் சிலிண்டர்களின் விலை விண்ணை நோக்கி செல்கிறது. இதனால் நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கிடையே ஏற்ப்பட்டுள்ள வர்த்தக போர் ஆகும். ஆனாலும் மத்திய அரசு தொடர்ந்து இதை கண்காணித்து வருகிறது. விரைவில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வை சந்திக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது.
இந்த வார தொடக்கத்தில் ரூ.72.91 ஆகா இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு 43 பைசாக்கள் வீழ்ச்சி கண்டு, இன்று ரூ.73.34 ஆக சரிவடைந்தது. இது உச்சக்கட்ட சரிவாகும். இதனால் பங்கு சந்தைகளும் வீழ்ச்சி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.