புதுடெல்லி: கடலின் அலைகள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பினால், கடலின் ஆழத்தை அறிந்து கொள்வது முக்கியம். அதே போல், கடல் பகுதியில் எதிரிகளை கட்டுப்படுத்த வேண்டுமானால், நமது கடற்படையின் வலிமையை கூட்ட வேண்டும்.
அந்த வகையில் இந்தியாவின் (India) பாகுபலி என கருதப்படும் இந்திய போர் கப்பல் கவரட்டி ( INS Kavaratti ) இந்திய கடற்படையில் முறையாக இணைக்கப்பட்டது
இந்திய ராணுவ (Indian Army) தலைமை ஜெனரல் மனோஜ் முகுந்த் நர்வானே, இந்திய கடல் படை கப்பல் கவரட்டியை விசாகபட்டினத்தில், இந்திய கடற்படையின் இணைத்தார். அப்போது அவர், "நீர்மூழ்கி கப்பலை கண்டறிந்து தாக்கும் அமைப்பை கொண்ட இந்த உள்நாட்டு போர்க்கப்பல் INS Kavaratti பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது எதிர் நாட்டு ரேடாரில் சிக்காத போர் கப்பல். இதன் வடிவமைப்பை, கடற்படை வடிவமைப்பு இயக்குநரகம் தயாரித்தது. இதை கொல்கத்தாவின் கார்டன் ரிசர்ச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
INS Kavaratti போர் கப்பலில், 90 சதவீத உள்நாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பதோடு, நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து அதை தொடரக்கூடிய சென்சார்களும் உள்ளன. மேலும், இந்த போர் கப்பல் அது ரேடாரில் எளிதில் சிக்காது.
ALSO READ | தொடர்கிறது இந்தியாவின் அதிரடி.. DRDO-வின் நாக் ஏவுகணை பரிசோதனை வெற்றி..!!!
ஐ.என்.எஸ் கவரட்டி என்ற பெயர் வரக் காரணம் என்ன?
1971 ஆம் ஆண்டில் பங்களாதேஷை பாகிஸ்தானிலிருந்து பிரிக்கும் ஆபரேஷனில் முக்கிய பங்கு வகித்த போர்க்கப்பல் ஐ.என்.எஸ் கவரட்டியின் பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 109 மீட்டர் மற்றும் அகலம் 12.8 மீட்டர். இதில் 4B டீசல் என்ஜின்கள் உள்ளன. இதன் எடை 3250 டன். கடற்படையில் சேருவதன் மூலம், அணுசக்தி, வேதியியல் மற்றும் உயிரியல் நிலைமைகளில் பணிபுரியும் திறன் கொண்ட கடற்படையின் வலிமை பெரிதும் அதிகரிக்கும்.
INS Kavaratti, last of the 4 indigenously built Anti-Submarine Warfare stealth corvettes, is all set to join Indian Navy.
Designed by Indian Navy's Directorate of Naval Design, the ship portrays our growing capability in becoming self-reliant through indigenization: Indian Navy pic.twitter.com/jHFcuGIkwT
— ANI (@ANI) October 22, 2020