பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு DRDO உருவாக்கிய, பீரங்கி வாகனங்களை தாக்க வல்ல நாக் ஏவுகணையின் இறுதி பரிசோதனையை இந்தியா வியாழக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டது.
ராஜஸ்தானில் (Rajasthan) உள்ள போக்ரானில் காலை 6:45 மணிக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. "DRDO உருவாக்கிய நாக் ஏவுகணையின் இறுதி சோதனையை இந்தியா இன்று வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த சோதனை காலை 6:45 மணிக்கு ராஜஸ்தானில் உள்ள போக்ரானில் மேற்கொள்ளப்பட்டது," என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதிகாரிகள் அறிக்கை ஒன்றில் கூறினார்.
எதிரி டாங்குகள் மற்றும் பிற கவச வாகனங்களை அழிக்கும் வல்லமை பெற்ற ஏவுகணை அமைப்பு இப்போது இந்திய இராணுவத்தில் (Indian Army) இணைய தயாராக உள்ளது.
நாக் ஏவுகணை கேரியரில் (NAMICA) இருந்து சுடப்படும் நாக் ஏவுகணை அமைப்பு, இலக்குகளை 4 முதல் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்று தக்க முடியும். இதில் இலக்கை துல்லியமாக தாக்கும் நவீன தொழில் நுட்பத்தை கொண்டது.
NAG ஏவுகணை மூன்றாம் தலைமுறை பீரங்கி வாகன எதிர்ப்பு ஏவுகணை ஆகும், இது பகல் மற்றும் இரவு என அனைத்து நேரங்களிலும், எதிரியின் டாங்குகள் மீது சிறந்த வகையில் தாக்குதல் நடத்த முடியும்.
ALSO READ | அக்டோபர் 22ம் தேதியை கருப்பு தினமாக இந்தியா அறிவிப்பு! காரணம் என்ன தெரியுமா?
2.5 கி.மீ.க்கு மேல் சென்று தாக்கும் மூன்றாம் தலைமுறை ATGM-கள் அதாவது பீரங்கி வாகனங்களை தாக்கும் ஏவுகணைகல் ராணுவத்திற்கு தேவை. இந்த தேவையை இந்த நாக் ஏவுகணை பூர்த்தி செய்கிறது
இராணுவம் தற்போது இரண்டாம் தலைமுறை மிலன் 2 டி ( Milan 2T) மற்றும் கொங்கூர் பீரங்கி வாகனத்தை அழிக்கும் ஏவுகணைகளைப் (Konkur ATGM) பயன்படுத்துகிறது.
இந்திய ராணுவத்திற்கு 300 நாக் ஏவுகணைகள் மற்றும் 25 NAMICA-க்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் 2018 ல் அனுமதி அளித்தது.
இந்தியாவை தற்சார்ப்பு ஆக்க வேண்டும் என அழைப்பு விடுத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியும், பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங், இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த DRDO மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டியுள்ளனர்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ள நாக் மேவுகணை, நிலத்திலிருந்தும், வான் பரப்பிலிருந்தும் ஏவலாம் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
4-7 கி.மீ தூரம் சென்று தாக்க வல்ல இந்த நாக் ஏவுகணையில், உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே வைத்திருக்கும் தொழில்நுட்பமான இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பம் அடிப்படையிலான திறன்களை கொண்டுள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR