புதுடெல்லி: விவசாயிகளின் போராட்டத்தின் மத்தியில், நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் விவசாய சட்டங்களின் பிரிவுகளை திருத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நட்த்திக் கொண்டிருக்கும் நிலையில், நரேந்திர மோடி (Narendra Modi) தலைமையிலான அரசாங்கம் விவசாய சட்டங்களின் (Farm laws), சில பிரிவுகளை திருத்துவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் உண்மையா இல்லையா என்பது இன்றோ அல்லது நாளையோ தெரிந்துவிடும்.
ALSO READ | Farmers Protest: விவசாயிகள் போராட்டம் திட்டமிட்டபடி டிசம்பர் 8 ஆம் தேதி Bharat Bandh
10 நாட்களுக்கு மேலாக தேசிய தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் நடைபெற்றுவரும் போராட்டம் பல இன்னல்களை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் ‘நியாயமான கோரிக்கைகளை’ நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது.
விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தகம் (Promotion and Facilitation) சட்டம் 2020, விவசாயிகள் (Empowerment and Protection) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம், 2020, மற்றும் அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) (Essential Commodities (Amendment)) சட்டம், 2020 என புதிதாக உருவான விவசாயச் சட்டங்களை எதிர்த்து, அவற்றை திரும்ப்ப் பெறக் கோரி விவசாயிகள் போராட்டம் (Farmer protest) நட்த்தி வருகின்றனர். மத்திய அரசில் அங்கம் வகித்த அமைச்சர் ஒருவரும் இந்த சட்டம் தொடர்பாக பதவி விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டங்கள் "விவசாயிகளுக்கு எதிரானவை" என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை அகற்றுவதற்கான வழியை ஏற்படுத்திவிடும் என்றும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கவலை கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, இந்த புதிய சட்டங்கள், பெருநிறுவனங்களுக்கு சாதகமாகவும், விவசாயிகளுக்கு பாதகமாகவும் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
எது எவ்வாறாயினும், புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு சிறந்த வாய்ப்புகளைத் தரும் என்றும் விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
தனியார் நிறுவனம் கொடுக்கும் தகவல்களின்படி, குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Support Price (MSP)) உள்ளிட்ட விவசாயிகளின் மூன்று அல்லது நான்கு முக்கியமான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உடன்பட தயாராகிவிட்டது.
ALSO READ | விவசாயிகள் போராட்டம்: பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை; நீடிக்கும் போராட்டம்
முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாவிட்டால், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாகவும், தேசிய தலைநகருக்கு செல்லும் மேலும் சாலைகளை தடுப்பதாகவும் அச்சுறுத்தியிருந்தனர். அதோடு டிசம்பர் 8 ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் ‘பாரத் பந்த்’ (‘Bharat bandh’) நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். மத்திய அரசு நேற்று போராட்டக்காரர்களுடன் ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. அதிலும் சமரசம் ஏற்படவில்லை. டெல்லியின் அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்துடன் எல்லைகளில் தங்கியிருக்கும் விவசாயிகள் தொடர்ந்து தலைநகருக்கு செல்லும் முக்கிய பாதைகளைத் தடுத்து போராட்டத்தை தொடர்கின்றனர்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR