உலக அளவில் முதலிடம் பிடித்த #IStandWithArchanaSingh ஹஷ்டாக்... காரணம் என்ன?

பிரியங்கா காந்தி குற்றம் சாட்டிய பெண் போலீஸ் அதிகாரி அர்ச்சனா சிங்கு ஆதரவாக உலக அளவில் முதலிடம் பிடித்த #IStandWithArchanaSingh என்ற ஹேஷ்டாக்

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Dec 29, 2019, 10:33 AM IST
உலக அளவில் முதலிடம் பிடித்த #IStandWithArchanaSingh ஹஷ்டாக்... காரணம் என்ன?
Pic Courtesy : ANI

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டிய போலீஸ் பெண் அதிகாரி அர்ச்சனா சிங்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக #IStandWithArchanaSingh என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி பதிவிட்டு வருகின்றன. இந்த ஹேஷ்டாக் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் சுற்றி வளைத்து கழுத்தை நெரித்ததாக நேற்று பிரியங்கா காந்தி கூறியிருந்தார் குறிப்பிடத்தக்கது.

உ.பி. போலீசார் மீது குற்றம் சாட்டி பிரியங்கா காந்தி நேற்று கூறியது, நான் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்றேன். அந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு காரணம் உத்தர பிரதேச அரசாங்கம். அவர்களை நான் பார்க்க செல்வதை ஏன் உ.பி. அரசு தடுக்கிறது. நான் அமைதியாக தான் போனேன். எனது கார் தடுத்து நிறுத்தப்பட்டது. நான் காரில் இருந்து இறங்கி கால்நடையாகச் சென்றேன். ஆனால் லக்னோ பெண் போலீசார் என்னை சுற்றி வளைத்து கழுத்தை நெரித்தனர். பின்னால் இருந்து தள்ளி விட்டனர். பாதிக்கப்பட்ட நபர்களை சந்திப்பதை தடுப்பதற்கான காரணங்களைக் கூறுங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை வலுகட்டாயமாக தடுத்து நிறுத்தி தள்ளி விட்டனர் எனக் கூறினார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுக்குறித்து வீடியோ வெளியானது. அதில் வீடியோவை பார்த்த பலர், பிரியங்கா காந்தியை போலீசார் தள்ளிவிட வில்லை என குறிப்பிட்டனர். மேலும் சமூக வலைத்தளங்களில் பெண் போலீசாருக்கு ஆதரவாக கருத்துக்கள் பதிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய பெண் போலீசார் அர்ச்சனா சிங், பிரியங்கா காந்தி கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை. நான் என் கடமையை தான் செய்தேன். யாரும் அவரை தாக்கவில்லை. அவரை காப்பாற்ற நாங்கள் தான் கஷ்டப்பட்டோம் என்று கூறினார்.

தற்போது சமூக வலைதளங்களில் பெண் போலீசார் அதிகாரிக்கு ஆதரவாக #IStandWithArchanaSingh என்ற ஹேஷ்டாக் மூலம் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.