முன்னாள் முதல்வர் கட்டிய கட்டிடத்தை இடிக்கும் முதல்வர்!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிருஷ்ணா நதி கரையில்  கட்டிய அரசு கட்டிடம் இடிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Last Updated : Jun 24, 2019, 04:06 PM IST
முன்னாள் முதல்வர் கட்டிய கட்டிடத்தை இடிக்கும் முதல்வர்! title=

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கிருஷ்ணா நதி கரையில்  கட்டிய அரசு கட்டிடம் இடிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜய வாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் பிரஜா வேதிகா என்ற அரசு கட்டிடம் அமைந்துள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டின் அருகே கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் ஆந்திராவில் உள்ள 13 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த திடீர் கூட்டத்திற்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமை தாங்கினார். அப்போது அவர் பிரஜா வேதிகா கட்டிடம் இடிப்பு குறித்து அறிவித்துள்ளார்.

கூட்டத்தில் அவர் பேசுகையில்., "சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் அதை மதிக்க வேண்டும். இன்று கூட்டம் நடைபெறும் பிரஜா வேதிகா கட்டிடம் கடந்த ஆட்சியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதிக்கரையில் இதை கட்டுவதற்கு முறைப்படி சுற்றுச்சூழல் துறையிடமோ, உள்ளாட்சி அமைப்பிடமோ எந்த அனுமதியும் பெற வில்லை. விதிகளுக்கு மாறாக முன்னாள் முதல்வர் வீடு அருகே இது கட்டப்பட்டுள்ளது.

இதேபோன்று விதியை மீறி பொதுமக்களில் யாராவது ஒருவர் கட்டிடம் கட்டி இருந்தால் அதை அரசு விட்டுவைக்குமா? எனவே விதியை மீறி கட்டப்பட்ட இந்த கட்டிடமும் அகற்றப்பட வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி அடுத்த இரண்டு நாட்களில் இந்த கட்டிடம் இடிக்கப்படும். அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்திரபாபு நாயுடு வெளிநாடு சென்றுள்ள நிலையில் அவரது கட்சி தொண்டர்கள் ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Trending News