ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தலைநகரான ஜம்மு பேருந்து நிலையத்தில் இன்று காலை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஜம்மு - காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார். இச்சம்பவத்தில் பலியான நபரின் பெயர் முகமத் ஷாரிக் (வயது 17), அவர் உத்தரகான்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப். உறுதி செய்துள்ளது.
சமீபத்திய தகவல்களின்படி, தாக்குதலில் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் தெற்கு காஷ்மீரில் வசிக்கிறார். இரண்டு மூன்று பேர் சேர்ந்து, இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து, இதுவரை 12 சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளது. அவர்களிடம் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை காஷ்மீரில் உள்ள ஒரு பயங்கரவாத குழு நடத்தியதறக்கான ஆதாரங்களின் படி தகவல் கிடைத்துள்ளதகா தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்தில் ஈடுப்படலாம் என்று பாதுகாப்பு துறைக்கு உளவுத்துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.