புல்வாமா தாக்குதலையும், புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் ஆதரிக்கும் ஜெய்ஷ்-ஈ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் பாத்திரத்தையும் குறித்து, Zee News அதன் பிரபலமான நிகழ்ச்சியான டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் (DNA) நிகழ்ச்சியில் அப்பட்டமாக வெளிப்படுத்தியது. இதன் மூலம் பாகிஸ்தான் நாட்டின் தடைசெய்யப்பட்ட இயக்கத்தில் ஆதரவு இணையதளமான அல் கலாம்-ல் Zee News தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் சுதிர் சௌத்ரி அதன் DNA நிகழ்ச்சி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது!
அல் கலாம் பத்திரிகையில் வெளியான ஒரு தலையங்கத்தில், பாக்கிஸ்தானைப் பற்றிய தவறான தகவல்களை பரப்பி, இந்திய பார்வையாளர்களை தவறாக வழிநடத்துவதாகவும், உண்மைகளை மறைப்பதாகவும் Zee News மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Zee News நிகழ்ச்சியின் மூலம், பாக்கிஸ்தானிய மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகள் மிகுந்த அழுத்தத்தின் கீழ் இருப்பதோடு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து அச்சமற்ற நிலையில் இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அல் கலாம் இணைய பத்திரிக்கையின் இந்த நடவடிக்கையின் மூலம், புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள JeM தலைவர் மசூத் அஸ்ஹர் ஏன் Zee News தொலைக்காட்சியை கண்டு அஞ்சுகின்றார் என்ற கேள்வி மக்களின் மனதில் எழுகிறது.
இந்தியாவில் போர் எச்சரிக்கை எழுந்ததிற்கு காரணம் இந்திய ஊடகங்கள் தான் என குற்றம்சாட்டியுள்ள அல் கலாம் பத்திரிக்கை., குறிப்பாக புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் வெளியான Zee News-ன் செய்திகள் தான் போர் எச்சரிக்கைக்கு ஆரம்ப புள்ளி என விமர்சித்துள்ளது.
''Negative and Condemnable Face of the Indian Media,'' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த தலையங்கத்தில்., இந்தியாவிற்கும் - பாகிஸ்தானுக்கும் இடையே குழப்பத்தை ஏற்படுத்தவது Zee News செய்திகளும், அதன் ஆசிரியர் சுதிர் சௌதிரியும் தான் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Zee News செய்தி ஆசிரியர் சுதிர் சௌதிரி தனது நிகழ்ச்சியின் போது பங்களாதேஷின் உருவாக்கத்தில் இந்தியா ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்தாகவும் பலூசிஸ்தானில் பாக்கிஸ்தான் எதிர்ப்பு இயக்கத்தை ஆதரிப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதனை தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ள அல் கலாம் பத்திரிக்கை., இந்திய செய்தி ஊடகங்கள் குறிப்பாக Zee News இந்தியாவின் பார்வையாளர்களைத் தூண்டிவிட்டு போர் வெறித்தனத்தை ஊக்குவிப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. மேலம் ஆதாரமற்ற செய்திகளை வெளிப்படுத்தி இந்திய மக்களின் மனதில் குழப்பத்தை உண்டாக்குவதிலும் Zee News கைதேர்ந்துள்ளது எனவும் விமர்சித்துள்ளது.
புல்வாமா தாக்குதல் குறித்து தவறான செய்திகள் பகிரப்பட்டதாகவும், பின்னர் நடந்த நிகழ்வுகளிலும் இந்திய ஊடகங்கள் பரவலாக விமர்சனம் செய்ததாக அல் கலாம் கட்டுரை குறிப்பிட்டுள்ளது.
JeM தலைவர் முலனா மசூத் அஸ்ஹர் உலக அமைப்பினரால் உலகளாவிய பயங்கரவாதி என அறிவிக்கப்படுமா என்பதை தீர்மானிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூடிய போது இந்த கட்டுரை வெளியாகியுள்ளது.
JeM தலைவர் முலனா மசூத் அஸ்ஹர் உலக அமைப்பினரால் உலகளாவிய பயங்கரவாதி என அறிவிக்க வேண்டும் என இந்தியா பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட போது, அதனை தடுக்க சீன பலமுறை முற்பட்டது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக செயல்பட பாக்கிஸ்தானில் சர்வதேச அழுத்தங்கள் இருந்தாலும், வெறுப்புணர்வு பற்றிய செய்திகளை வெளியிடும் ஒரு பிரச்சார கருவியாக அல் கலாம் வெளிவந்துள்ளது.