ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: முதல் கட்டமாக 13 தொகுதிகளில் வாக்குப் பதிவு!

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 13 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது!

Last Updated : Nov 30, 2019, 06:52 AM IST
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: முதல் கட்டமாக 13 தொகுதிகளில் வாக்குப் பதிவு! title=

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 13 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது!

ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு நாளை முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 23-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

முதல் கட்டமாக இன்று 13 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் ஆகிய தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 6, ஜேஎம்எம் 4, ஆர்ஜேடி 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாஜக 12 தொகுதிகளிலும் ஹூசைனியாபாத்தில் வினோத்குமார் சிங்கை ஆதரித்தும் களத்தில் நிற்கிறது. 

கடந்த தேர்தலில் பாஜகவின் கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஏஜேஎஸ்யூ லோகர்தாகாவில் போட்டியிடுகிறது. முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் ஜேவிஎம் தனித்து போட்டியிடுகிறது. நாளைய தேர்தல் களத்தில் மொத்தம் 189 வேட்பாளர்கள் உள்ளன. இவர்களில் 15 பேர் பெண்கள். மொத்தம் 4,892 வாக்குச் சாவடிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் ஒன்றான பகவந்த்பூர் தொகுதியில்தான் அதிகபட்சமாக 3,78.004 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக கும்லா தொகுதியில் 2,19, 874 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். லோகர்தாகவில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வர் ஓரோன் போட்டியிடுகிறார். 

இந்நிலையில், காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 3 மணி வரை வாக்களிக்கலாம். முதல் கட்டத் தேர்தலில் 189 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், 38 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்கை இன்று பதிவு செய்கின்றனர். வாக்குப்பதிவுக்காக 3 ஆயிரத்து 906 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பா.ஜ.க. தனித்தும், காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் முன்னேற்ற முன்னணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன. கூட்டணியமைத்து தலா ஆறு, மூன்று, மூன்று என தொகுதிகளை பிரித்துக் கொண்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறும். 

 

Trending News