ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவி மற்றும் 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 5-ஆம் தேதி சில முகமூடி அணிந்த கும்பல் தடியுடன் வந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மாணவர் சங்க தலைவி ஆஷிஜோஸ் உள்பட 33 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதல் நடத்தியது இடதுசாரிகளும், அகில பாரதிய வித்யார்த்த பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பினரும் மாறிமாறி குற்றம்சாட்டினர்.
இந்தநிலையில் மர்ம கும்பல் தாக்குதலில் தலையில் காயம் அடைந்த மாணவர் சங்க தலைவி ஆஷிஜோஸ் மற்றும் 19 பேர் மீது டெல்லி போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறை தாக்குதலுக்கு முந்தய நாளாளில் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வர் அறையை அடித்து சூறையாடியதாகவும், காவலாளியை தாக்கியதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவாகி இருக்கிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.