47-வது தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சரத் அரவிந்த் போப்டே....

47-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் நீதிபதி சரத் அரவிந்த் போப்டே. குடியரசு தலைவர் ராம்நாத் கோவித் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்...

Last Updated : Nov 18, 2019, 09:55 AM IST
47-வது தலைமை நீதிபதியாக பதவியேற்கும் சரத் அரவிந்த் போப்டே.... title=

09:53 AM 18-11-2019

47-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் நீதிபதி சரத் அரவிந்த் போப்டே. குடியரசு தலைவர் ராம்நாத் கோவித் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்...


நீதிபதி சரத் அரவிந்த் போப்டே 47-வது தலைமை நீதிபதியாக திங்களன்று பதவியேற்பார், மேலும் இந்த பதவியில் சுமார் 18 மாதங்கள் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமானம் செய்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்னதாக கடந்த அக்டோபர் 18 அன்று நீதிபதி போப்டே அவர்களை தனது வாரிசாக பரிந்துரைத்து மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். நீதிபதி போப்டே உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மிக மூத்த நீதிபதி ஆவார். 

பாரம்பரியத்தின் படி, பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி தனது வாரிசின் பெயரை அரசாங்கத்திற்கு எழுதி பரிந்துரைக்க வேண்டும். அந்த வகையில் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நீதிபதி போப்டே அவர்களை தனது வாரிசாக பரிந்துரைத்துள்ளார்.

ஏப்ரல் 24, 1956 அன்று நாக்பூரில் பிறந்த நீதிபதி போப்டே மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். மும்பை மகாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலைக்கழகம் மற்றும் நாக்பூரின் மகாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் அதிபராகவும் பணியாற்றி வருகிறார். நகரின் SFS கல்லூரியில் பட்டம் பெற்ற அவர் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

63 வயதான நீதிபதி போப்டே 1978-ல் மகாராஷ்டிராவின் பார் கவுன்சில் பாத்திரத்தில் சேர்ந்தார் மற்றும் 1998-ல் ஒரு மூத்த வழக்கறிஞராக பதவியேற்றார். பின்னர் நீதிபதி போப்டே 2000-ம் ஆண்டில் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2012-ஆம் ஆண்டு அவர் மத்திய பிரதேச தலைமை நீதிபதியாக உயர்ந்தார் மற்றும் 2013-ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்றார்.

அயோத்தி நில தகராறு வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்சில் நீதிபதி போப்டே ஒரு பகுதியாக இருந்தார். தலைமை நீதிபதி கோகோய் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கைக் கையாண்ட அவர் உள் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். இன்று தலைமை நீதிபதியாக பதவியேற்கும் போப்டே ஏப்ரல் 23, 2021 அன்று ஓய்வு பெறுவார்.

இந்தியாவின் 46-வது தலைமை நீதிபதி ரன்ஜன் கோகோய், அக்டோபர் 3, 2018 அன்று பொறுப்பேற்று, ஞாயிற்றுக்கிழமை பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News