கமலா மில் தீ-விபத்து: "1 அபொவ்" மேலாளர்கள் மீது அதிரடி உத்தரவு!

மகாராஸ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கமலா மில்ஸ்-ல், கடந்த டிச., 28 அன்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ-விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 

Last Updated : Jan 1, 2018, 03:49 PM IST
கமலா மில் தீ-விபத்து: "1 அபொவ்" மேலாளர்கள் மீது அதிரடி உத்தரவு! title=

மகாராஸ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கமலா மில்ஸ்-ல், கடந்த டிச., 28 அன்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ-விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 
லோவர் பேரல் என்ற இடத்தில் உள்ள கமலா மில்ஸ் அடுக்குமாடி கட்டட வளாகத்தில் இருந்த பப்பில் இந்த பயங்கர தீ-விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவலளறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக விபத்து ஏற்பட்ட "1 அபோவ்" பப் உரிமையாளர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பின்னர் பாதுகாப்பு நலன் கருதி அப்பகுதியில் அத்துமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அரசு அதிகாரிகள் இடித்தனர்.

பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் அடுத்தக் கட்டமாக தற்போது "1 அபொவ்" பப்-ன் மேலாளர்கள் இருவரும் ஜன., 9 ஆம் நாள் வரை காவல்துறை கண்காணிப்பில் வைக்க பொய்வாடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Trending News