கோவிட் நோயாளிகளுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய மருத்துவர், மகிழ்ந்து வாழ்த்திய நோயாளிகள்!!

கோவிட் நோயாளிகளிடையே உற்சாகத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், மருத்துவரான சோஹைல் சைபுதீன் இனாம்தார் தனது பிறந்த நாளை, பிரத்யேக கோவிட் பராமரிப்பு மையமான O P Jindal மையத்தில், கேக் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை நோயாளிகளுக்கு வழங்கிக் கொண்டாடினார்.

Written by - ZEE Bureau | Last Updated : Aug 6, 2020, 05:44 PM IST
  • மருத்துவர் நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைத்து அவர்களை கொஞ்சம் உற்சாகப்படுத்த விரும்பினார்.
  • தனது பிறந்த நாளை அவர்களுடன் கொண்டாடினார்.
  • இந்த செயலால் நோயாளிகளிடம் உற்சாகம் பெருகியதை அவர் கண்டார்.
கோவிட் நோயாளிகளுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய மருத்துவர், மகிழ்ந்து வாழ்த்திய நோயாளிகள்!!

கோவிட் நோயாளிகளிடையே (Covid Patients) உற்சாகத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், மருத்துவரான சோஹைல் சைபுதீன் இனாம்தார் தனது பிறந்த நாளை, பிரத்யேக கோவிட் பராமரிப்பு மையமான O P Jindal மையத்தில், கேக் மற்றும் பிஸ்கட் ஆகியவற்றை நோயாளிகளுக்கு வழங்கிக் கொண்டாடினார்.

பெங்களூருக்கு வடக்கே 316 கி.மீ தொலைவில், ஜிந்தால் ஸ்டீல் ஆலை மற்றும் டவுன்ஷிப் அமைந்துள்ள, பல்லாரி மாவட்டத்தின் சந்தூர் தாலுகாவில் உள்ள தோரங்கல்லுவில் இந்த சிறப்பு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

எலும்பியல் மருத்துவ மாணவரான இனாம்தார், பல்லாரியில் (Ballari) உள்ள விஜயங்கரா மருத்துவ அறிவியல் கழகத்தில் (VIMS) தனது இறுதி ஆண்டு முதுகலை படிப்பு தேர்வை முடித்துள்ளார். குறைந்த அளவு பாதிப்பில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அந்த கோவிட் மருத்துவமனையில் ஒரு வாரம் பணியில் இருந்தார்.

"நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களின் உறவுகளும் அருகில் இல்லை. ஆகையால் அவர்கள் மிகவும் தனிமைப்படுத்தப் பட்டதாக உணர்கிறார்கள் என்பதை நான் பார்த்தேன்" என்று டாக்டர் இனாம்தார் கூறினார்.

ஆகையால் அந்த இளம் மருத்துவர் அவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து மருத்துவமனையில் அவர்களை கொஞ்சம் உற்சாகப்படுத்த விரும்பினார். அவரது பிறந்த நாளும் வரவே, அவர்களுடன் சேர்ந்து இதைக் கொண்டாடினால் அவர்களுக்கு அது உற்சாகத்தை அளிக்கும் என அவருக்குத் தோன்றியது.

தலை முதல் கால் வரை பாதுகாப்பு உபகரணங்களை (PPE) அணிந்துகொண்டு, இனாம்தாரும் அவரது சகாக்களும் படுக்கையில் இருந்த கோவிட் நோயாளிகளுக்கு பிறந்தநாள் கேக்கை காகித ப்ளேட்களில் விநியோகித்தனர்.

இந்த செயலால் நோயாளிகளிடம் உற்சாகம் பெருகியதை அவர் கண்டார். அவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அவர் மேற்பார்வையில் இருந்த 32 நோயாளிகளும் இந்த மகிழ்ச்சியை அனுபவித்தனர்.

"அவர்களின் மகிழ்ச்சியைப் பார்க்க எனக்கும் மிக மகிழ்ச்சியாக இருந்தது. நோயாளிகளில் ஒருவர் எனக்கு அவரது ஆப்பிள்களில் ஒன்றை பரிசளித்தார். பலர் எனக்கு மகிழ்ச்சியாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்." என்று அந்த மருத்துவர் கூறினார்.

மற்றொரு நோயாளி டாக்டர் இனாம்தார் நீண்ட ஆயுளுடன் வாழ ஆசீர்வதித்தார்.

வயதான நோயாளிகளும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். “நீங்கள் உங்கள் பிறந்த நாளை எங்களுடன் கொண்டாடினீர்கள், நீங்கள் 100 ஆண்டுகள் நன்றாக வாழ்வீர்கள்” என்று டாக்டரை அவர்கள் வாழ்த்தினர்.

டாக்டர் இனாம்தரின் கூற்றுப்படி, இந்த கடினமான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியத்தோடு நோயாளிகளின் மன ஆரோக்கியமும் முக்கியமானது.

ஞாயிற்றுக்கிழமை, பல்லாரியில் 377 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டார்கள்.

ALSO READ: Good News! கொரோனா தடுப்பூசி முதல் கட்ட சோதனையில் வெற்றி.. நாளை முதல் 2-ம் கட்ட சோதனை

More Stories

Trending News