காஷ்மீர்: இந்தியாவுக்கு பாக்கிஸ்தான் அழைப்பு

Updated: Aug 15, 2016, 05:51 PM IST
காஷ்மீர்: இந்தியாவுக்கு பாக்கிஸ்தான் அழைப்பு
Zee Media Bureau

காஷ்மீர் குறித்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர், இந்திய வெளியுறவு செயலாளருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பிற்கான கடிதத்தை, பாகிஸ்தானுக்கான இந்திய தூதரிடம் அவர் வழங்கினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. ஆனால், இந்தியா இதனை நிராகரித்தது. பயங்கரவாதிகளை தியாகிகளாக சித்தரிக்கக்கூடாது என பாகிஸ்தானிடம் உறுதியாக கூறிய இந்திய அரசு, எல்லை தாண்டிய பயங்கரவாதம், பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதிகள் சுதந்தரமாக உலா வருவது குறித்தும் மும்பை மற்றும் பதன்கோட் பயங்கரவாத தாக்குதல் குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த முடியும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.