புதுடெல்லி: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் சித்தராமையா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் கேசி வேணுகோபால் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கட்சியின் சார்பில் துணை முதலமைச்சராக சிவக்குமார் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
#WATCH | Siddaramaiah will be the Chief Minister of Karnataka and DK Shivakumar will be the only deputy CM, announces KC Venugopal, Congress General Secretary -Organisation. pic.twitter.com/q7PinKYWpG
— ANI (@ANI) May 18, 2023
நீண்ட நாட்களாக நீடித்து வந்த சஸ்பென்ஸை முடிவுக்கு கொண்டு வந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தென் மாநிலத்தை வழிநடத்த சித்தராமையாவை தேர்வு செய்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக இருப்பார்.
மேலும் படிக்க - காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு ₹62000 கோடி தேவை!
கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் மற்றும் அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் இன்று காலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுடன் காலை உணவு அருந்தும்போது இறுதி ஆலோசனை நடத்தினார்கள்.
கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்பார்கள் - கே.சி.வேணுகோபால் டெல்லியில் தனது செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.
கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்பார் என்றும், டிகே சிவக்குமார் துணை முதல்வராக பதவியேற்பார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக காலை உணவில் அனைவரும் சந்தித்தனர்.
கர்நாடக துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள டிகே சிவக்குமார், இன்று பதிவிட்ட டிவிட்டர் பதிவில், "கர்நாடகத்தின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நமது மக்கள் நலனே எங்கள் முதன்மையான முன்னுரிமை, அதற்கு உத்தரவாதம் அளிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்" என்று ட்வீட் செய்துள்ளார்.
Karnataka Deputy CM designate DK Shivakumar
tweets, "Karnataka's secure future and our people's welfare is our top priority, and we are united in guaranteeing that." pic.twitter.com/WK6HeImoxV— ANI (@ANI) May 18, 2023
கர்நாடகாவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, ஒத்த கருத்துள்ள கட்சிகளைச் சேர்ந்தவர்களை அழைப்போம் என கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், அமைப்புப் பொதுச் செயலாளருமான கேசி வேணுகோபால் தெரிவித்தார்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார்; மே 20ஆம் தேதி பதவியேற்கின்றனர். பதவியேற்பு விழா பெங்களூரில் மே 20-ம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. வியாழன் அன்று பெங்களூருவில் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி (சிஎல்பி) கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பாக பலரும் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாருக்கும், காங்கிரஸ் கட்சிக்குக்ம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் என அறிவித்தது தலைமை வாழ்த்துக்கள். ஒற்றுமை தான் கட்சியின் பலம் மற்றும் அரசியல் வெற்றி என்று அரசியல் உலகிற்கு உரக்க சொன்னது கர்நாடக காங்கிரஸ் என பாராட்டுகள் குவிகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ