கேரள சட்டமன்றத்தின் சுயேட்சை MLA PC ஜார்ஜ், தனது வாகனத்தை அனுமதிக்காத Toll Plaza-னை அடித்து நொறுக்கி சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது அங்கிருந்து CCTV கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவினில் MLA ஜார்ஜ் கோவத்துடன் வந்து கண்ணாடிகளை உடைக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது.
பெறப்பட்ட தகவல்களின் படி சம்பவத்தன்று ஜார்ஜ், திருசூரில் இருந்து கொச்சிக்கு தனது சொகுசு வாகனத்தில் சென்றுள்ளார். அவரது காரில் MLA பலகை பட்டியல் இல்லாததால், கட்டணமின்றி அனுமதிக்க toll plaza மறுத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜார்ஜ் வழிமறித்த toll plaza-வினை உடைத்துள்ளார்.
ஏழாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஜார்ஜ், இதற்கு முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தாமதமாக உணவு அளித்தமைக்காக பிரச்சணை செய்துள்ளார். தொடர்ந்து இவர் மீது இவ்வாறான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன.
#WATCH: Kerala Independent MLA PC George create ruckus at toll plaza in Thrissur, over payment of toll fee, and vandalises the barricade. A complaint has been filed. (Source: CCTV footage) (17.07.2018) pic.twitter.com/gNY2UWCvSb
— ANI (@ANI) July 18, 2018
அரசு ஊழியர்கள் இவ்வாறு சட்டத்தினை தங்கள் கையில் எடுப்பது இது முதல் முறை அல்ல, இதற்கு முன்னதகா பாஜக MLA ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் பனஸ்வாரா மாவட்டத்தில் இதேப்போன்ற விவகாரத்தால் toll plaza-னை உடைத்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
எனினும் இச்சம்பவங்கள் தொடர்பாக சம்தப்பட்ட டோல் பிளாஸா ஊழியர்கள் புகார் ஏதும் அளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.