கேரளா தனியார் பேருந்து ஸ்டிரைக் 4-வது நாளாக தொடர்கிறது!

கேரள மாநிலத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கோரி 4-வது நாளாக தனியார் பேருந்துகள் ஸ்டிரைக். சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ட கட்டணத்தை ரூ.10-ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை. 

Last Updated : Feb 19, 2018, 10:09 AM IST
கேரளா தனியார் பேருந்து ஸ்டிரைக் 4-வது நாளாக தொடர்கிறது! title=

கேரள மாநிலத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி 4-வது நாளாக தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.10-ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சலுகை கட்டணத்தை ரத்து செய்யவும் வலியுறுத்தியுள்ளனர். 

பேருந்து உரிமையாளர்களிடம் கேரள போக்குவரத்து அமைச்சர் சசீந்திரன் பேச்சுவார்த்தை நேற்று தோல்வி அடைந்துள்ளது. 

Trending News