கேரள சிவசேனா தலைவர் பெரிங்கம்மலா அஜி திங்கள்கிழமை திருவனந்தபுரத்துச் செயலகத்திற்கு வெளியே மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்தினார்.
டிசம்பர் 1 முதல் மாநிலத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கியது தொடர்ந்து பெரிங்கம்மலா அஜி தனது போராட்டத்தை துவங்கியுள்ளார்.
இதுகுறித்து ANI உடன் பேசிய அஜி, இந்த முடிவை வரவேற்கிறேன், ஆனால் அபராதம் குறித்து கவலைப்படுவதாகவும், இது நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு ஏற்க முடியாத வகையில் விதிக்கப்படுகிறது எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "இந்த முடிவை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நடுத்தர வர்க்க மக்களும் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். நீதிமன்றமும் அரசாங்கமும் பில்லியன் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கும்போது, அவர்கள் அனைவருக்கும் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ .500-1000 அபராதம் விதிக்கப்படும். இது அவர்கள் மீது ஒரு சுமையாக உள்ளது, " என்று தெரிவித்துள்ளார்.
Peringammala Aji, Shiv Sena: I completely agree with the decision. But middle class people also use two-wheelers. When court & govt make helmet mandatory for pillion riders, they'll be fined Rs 500-1000 if they don't wear helmets. It's a burden. Decision should be reviewed.(2.12) pic.twitter.com/iwlOSu2Ni7
— ANI (@ANI) December 2, 2019
பில்லியன் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுகளை டிசம்பர் 1-ஆம் தேதி கேரள அரசு அமல்படுத்தியது. இதனைத்தொடர்ந்து இரு சக்கர வாகன ஓட்டிகள் புதிய உத்தரவுகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய காவல்துறை வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையானது முறையாக கடைப்பிடிக்கப் படுகிறதா என போக்குவரத்து ஆணையர் அதிகாரிகளை பரிசோதிக்க உத்தரவிட்டுள்ளார். புதிய விதியை கடுமையாக அமல்படுத்துவதற்கு முன்பு விழிப்புணர்வு திட்டத்தை நடத்தவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், ஆரம்ப கட்டத்தில், அபராதம் வசூலிப்பதற்கு முன்பு வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியுமாறு அறிவுறுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
முதல் நாளில், மாநில தலைநகரில், இதன் பதில் கலவையாக இருந்தது. இருசக்கரத்தில் சவாரி செய்யும் பலர் இன்னும் ஹெல்மெட் அணியத் தொடங்கவில்லை என்ற தகவலே அப்போது வெளியானது. ஆனால் அடுத்து வந்த நாட்கள் அவ்வாறு இல்லை, அரசாங்கத்தின் முடிவை ஏற்று பலரும் தங்கள் பிடிவாதங்களை மாற்றி கொண்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றது.