பெண்ணின் கண்ணில் இருந்த 27 கான்டாக்ட் லென்ஸ்கள்... அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

கண்புரை அறுவை சிகிச்சையின் போது 67 வயது பெண்ணின் கண்ணில் 27 கான்டாக்ட் லென்ஸ்கள் சிக்கியதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 26, 2024, 05:16 PM IST
  • காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தும் போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • தினமும் இரவில் காண்டாக்ட் லென்ஸ்களை அகற்ற வேண்டும்.
  • காண்டாக்ட் லென்ஸ்கள் கார்னியாவிற்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கும்.
பெண்ணின் கண்ணில் இருந்த 27 கான்டாக்ட் லென்ஸ்கள்... அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள் title=

கண்கள் நம் அழகின் முக்கிய அங்கம் என்றால் மிகையில்லை. அந்த வகையில் பார்வை குறைபாடு உள்ளவர்கள், கண்ணாடிக்கு பதிலாக காண்டாக்ட் லென்ஸ்கள் பலர் பயன்படுத்துகின்றனர். சில சமயங்களில், கண்களின் அழகை அதிகரிக்க, தங்கள் கண்களின் நிறத்தை மாற்ற பல்வேறு வண்ண காண்டாக்ட் லென்ஸ்களையும் பயன்படுத்துகின்றனர்.

காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்தும் போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லை என்றால், அது கண்களில் பல வகையான பிரச்னைகளை ஏற்படுத்தும். அந்த வகையில், காண்டாக்ட் லென்ஸ் ஒன்றல்ல... இரண்டல்ல 27 காண்டாக்ட் லென்ஸ் இருந்த சம்பவம் மருத்துவர்களின் தலையை சுற்ற வைத்துள்ளது. 

கண்புரை அறுவை சிகிச்சையின் போது 67 வயது பெண்ணின் கண்ணில் 27 கான்டாக்ட் லென்ஸ்கள் சிக்கி இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரிட்டனில் உள்ள ஒரு பெண் 35 ஆண்டுகளாக மாதாந்திர டிஸ்போசபிள் லென்ஸ்கள் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் அவரது கண்களை (Eye Health) தொடர்ந்து பரிசோதிக்கவில்லை.

வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு முன், மருத்துவர் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொண்டிருந்தபோது, ​​​​அவளுடைய மேல் கண்ணிமைக்குக் கீழே ஒரு பெரிய, நீல நிறக் கட்டியை கவனித்தார். கட்டியை பரிசோதித்தபோது, ​​அங்கே ஒட்டியிருந்த 17 கான்டாக்ட் லென்ஸ்கள் மூட்டையாக இருந்தது தெரிய வந்தது. இதற்குப் பிறகு, நுண்ணோக்கியின் உதவியுடன் மேலும் 10 காண்டாக்ட் லென்ஸ்கள் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டன.

கண்களை இத்தனை கான்டாக்ட் லென்ஸ்கள் இருந்தும் அந்தப் பெண் தீவிரமான பிரச்சனை எதையும் உணரவில்லை என்பது தான் ஆச்சரியமான விஷயம். அந்த பெண்ணிற்கு லேசான அசௌகரியம் மற்றும் கண்களில் வறட்சி மட்டுமே இருந்துள்ளது. வயது மற்றும் உலர் கண் காரணம் எனக் கருதி அந்த பெண் பிரச்சனையை புறக்கணித்தனர்.

மருத்துவர்கள் கண்களில் இருந்த காண்டாக்ட் லென்ஸ்களை அகற்றிய பிறகு, தொற்று அபாயம் காரணமாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். கான்டாக்ட் லென்ஸ்கள் நீண்ட காலம் கண்ணில் இருந்தால், கண்ணில் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என்பதால், அவர்கள் சிகிச்சையை ஒத்தி வைத்தனர்.

மேலும் படிக்க | நோயற்ற வாழ்விற்கு.... தினமும் 15 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறி இறங்கினால் போதும்...

கண்ணில் இருந்து லென்ஸ் விழுந்துவிட்டதாக பலமுறை உணர்ந்ததாக கூறிய பாதிக்கப்பட்ட பெண், உண்மையில் அது கண்ணில் இருந்ததை தான் உணரவில்லை என பெண் கூறினார். பெண்ணின் 'கண் அமைப்பு' காரணமாக, கண் இமைகளுக்குக் கீழே லென்ஸ்கள் சிக்கிக் கொண்டதாக மருத்துவர்கள் ஊகித்தனர்.

காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்கவில்லை என்றால், அது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

வழக்கமான சோதனை: காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் தங்கள் கண்களை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.

லென்ஸ்களை சரியாகப் பயன்படுத்துங்கள்: லென்ஸ்கள் பயன்படுத்தும் போது, தினமும் இரவில் அதனை அகற்ற வேண்டும்.

கார்னியா பாதிப்பு: காண்டாக்ட் லென்ஸ்கள் கார்னியாவிற்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கும். எனவே லென்ஸ்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் கார்னியல் ஹைபோக்ஸியா பாதிப்பு உண்டாகி வீக்கம் மற்றும் தொற்று அபாயத்தை அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | டூத் பிரஷ் இல்லாமல் பற்களை பளபளப்பாக்கும் அற்புத பல்பொடி..! மஞ்சள் கறை சீக்கிரம் போகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News