புதுடில்லி: இன்று (வியாழக்கிழமை) மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) தலைவர் அமித் ஷா மோடியை சந்தித்து புதிய அமைச்சரவையில் இடம் பெரும் அமைச்சர்களின் பட்டியலை குறித்தும், பதவியேற்ப்பு விழா குறித்தும் தீவிரமாக ஆலோசனை செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அமித் ஷாவுடன் இறுதி சுற்று பேச்சுவார்த்தைகளில், பதவியேற்கவுள்ள மத்திய அமைச்சர்களின் பட்டியலை குறித்து ஆலோசனை செய்தனர். மோடி மற்றும் தனது புதிய அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சர்களின் பட்டியல் அனுப்பப்படும் எனத் தெரிகிறது.
இன்று மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்ப்பதற்கு முன்பாக மாலை 4:30 மணி அளவில் மத்திய அமைச்சரவை பட்டியலில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பிரதமரை சந்திக்க உள்ளனர். டெல்லி 7வது லோக் கல்யாண் சாலையில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. அதாவது மோடி அமைச்சரவையில் 65-70 அமைச்சர்கள் இடம் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நமக்கு கிடைத்த தகவலின் படி, , ஸ்மிருதி இரானி, ரவி ஷங்கர் பிரசாத், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், நரேந்திர தோமர், தர்மேந்திர பிரதான், சானந்தன் கவுடா, பிரகாஷ் ஜவடேகர், ராம் விலாஸ் பாஸ்வான், பியுஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, பிரஹ்லாத் ஜோஷி, சுரேஷ் அங்கடி, கிஷன் ரெட்டி போன்றோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ஜனதா தளம் (ஐக்கிய) மற்றும் சிவ சேனா கட்சிகளுக்கு 2 -2 எனவும், லோக் ஜன்சக்தி கட்சி மற்றும் அகாலித் தால் கட்சிக்கு 1-1 என்று அறிவிக்கலாம். தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் கூட்டாளியான அதிமுகவுக்கும் ஒரு இடம் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும் தனது கூட்டணி கட்சிகளுக்கும் பிரதமர் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதில் யார்? யார்? அமைச்சரவையில் இடம் பெறுவார்கள் என்று தெரியவில்லை.