தேர்தல் பத்திரங்கள் வழக்கு: அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யும்படி அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

Last Updated : Apr 12, 2019, 12:13 PM IST
தேர்தல் பத்திரங்கள் வழக்கு: அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு title=

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யும்படி அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
   
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, தேர்தல் பத்திர திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை எதிர்த்து. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில், பொது நல மனு தாக்கல் செய்துள்ளது. 

ந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், தேர்தல் நிதி பத்திரங்கள் வாங்கி, அதன்மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பது என்பது, ரொக்கமாக கொடுப்பதை விட சிறந்தது என்றார். மேலும் இந்த வழக்கு உத்தரவு இன்று கூறினார்.

அதில், தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள், நன்கொடையாளர்களின் பெயர்கள் மற்றும் பெறப்பட்ட தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மே 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். இந்த அறிக்கையை சீலிட்ட உறையில் வைத்து, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். 

Trending News