Lok Sabha Elections 2024 BJP Celebrity Candidates : கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்டமாக தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல், கிட்டத்தட்ட 7 கட்டமாக நடைப்பெற்று கடந்த ஜூன் 1ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், பாஜக கட்சியை ஆதரித்து தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருக்கும் நடிகர்-நடிகைகள் இந்த வருடத்தின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டனர்.
2024 நாடாளுமன்ற தேர்தல் :
இந்த ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் பாஜக, திமுக, காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தமிழகத்தில், திமுகவுடன் கூட்டணி வைத்த இந்தியா கட்சிகள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. இந்த நிலையில், பாஜக கட்சிக்கு தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதும் பல்வேறு நடிகர-நடிகைகள் தங்களது ஆதரவினை தெரிவித்திருந்தனர். இதையடுத்து, அந்த திரை நட்சத்திரங்கள் யார் யார்? அவர்கள் தற்போது எந்த நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்பதை இங்கு பார்ப்பாேம்.
கங்கணா ரனாவத்:
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடந்த சில நாட்களாக தனது பேச்சாலும் சில செயல்களாலும் மக்களின் கவனத்தை ஈர்த்த வண்ணம் இருந்தார். இந்த நிலையில், அவர் பாஜக கட்சியில் இணைந்து, அக்கட்சியின் சார்பில் தனது சொந்த ஊரான இமாச்சல பிரதேசத்தில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து, இதற்கு முன்னர் 6 முறை முன்னாள் முதல்வாராக இருந்த வீரபத்ர சிங்கின் மகனும் மண்டி தொகுதி பிரதிப சிங்கின் மகனுமான விக்ரமாதித்ய சிங் போட்டியிட்டார். இவர், காங்கிரஸ் வேட்பாளர். இந்த தொகுதியில் கங்கனா ரனாவத் முன்னணியில் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
சுரேஷ் கோபி:
மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாஜக கட்சி சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்த், காங்கிரச் கட்சி சார்பில் கே.முரலிதரன் போட்டியிட்டார். இதில், சுரேஷ் கோபி தற்போது வரை முன்னணியில் இருந்த நிலையில், தற்போது அவர் வெற்றி பெற்றிருக்கிறார். இதையடுத்து, முதன் முறையாக கேரளாவில் வெற்றி பெற்ற பாஜக எம்.பியாக மாறியிருக்கிறார்.
ராதிகா சரத்குமார்:
தமிழ் திரையுலக நடிகையான ராதிகா சரத்குமார், பாஜக கட்சி சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். இங்கு, இவரை எதிர்த்து, முன்னாள் தேமுதிக அரசியல் கட்சி தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். அதே போல நாம் தமிழர் கட்சி தரப்பில் கௌசிக் போட்டியிட்டார். இதில், விஜய் பிரபாகரன் முன்னணியில் இருக்கிறார்.
ஹேம மாலினி:
பிரபல பாலிவுட் நடிகையான ஹேம மாலினி ஏற்கனவே நாடாளுமன்ற எம்பியாக இருக்கிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் மீண்டும் மதுரா தொகுதியில் போட்டியிட்டார். இதற்கு முன்னர் அவர் 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களிலும் இவர் மதுரா தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். இந்த வருடம், அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் முகேஷ் தங்கரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சுரேஷ் சிங் ஆகியோரும் போட்டியிட்டனர். இதில், இவர் தற்போது முன்னிலை வகுத்து வருகிறார்.
மனோஜ் திவாரி:
பாலிவுட் பாடகரும் நடிகருமான மனோஜ் திவாரி, டெல்லி-வடகிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கன்னையா குமார் போட்டியிட்டார். இதில், மனோஜ் திவாரி முன்னிலையில் இருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ