Lok Sabha Election Result 2024: மேற்கு வங்கம் திரிணாமூல் காங்கிரஸ் கோட்டை..! மீண்டும் நிரூபித்த மம்தா பானர்ஜி - பாஜக 2வது இடம்

Lok Sabha Election Result 2024 West Bengal : மேற்கு வங்க மாநிலம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எக்கு கோட்டை என மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார். அவரது தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 4, 2024, 01:42 PM IST
  • மேற்கு வங்கத்தில் டிஎம்சி முன்னிலை
  • 31 தொகுதிகளில் அமோக வாய்ப்பு
  • அதிர் ரஞ்சன் சவுத்திரி தோல்வி முகம்
Lok Sabha Election Result 2024: மேற்கு வங்கம் திரிணாமூல் காங்கிரஸ் கோட்டை..! மீண்டும் நிரூபித்த மம்தா பானர்ஜி  - பாஜக 2வது இடம் title=

Lok Sabha Election Result 2024 West Bengal : லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் இருக்கிறது. அம்மாநிலத்தில் இருக்கும் மொத்தம் 42 தொகுதிகளில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான டிஎம்சி கட்சி 31 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. 10 தொகுதிகளில் பாஜகவும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் இருக்கின்றன. இறுதி முடிவில் மேலும் சில தொகுதிகள் மம்தா பானர்ஜியின் கட்சி பக்கம் செல்லவே வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், சில தொகுதிகளில் குறைவான வாக்குகள் வித்தியாசம் மட்டுமே இருக்கின்றன. 

மேலும் படிக்க | AP Elections 2024 Result : ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாஷ் அவுட்! அரியணை ஏறும் தெலுங்கு தேசம் கட்சி..

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மகுவா மொய்தாரா சுமார் 44 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணாநகர் தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். இவர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்ததால் நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இவர் மீது பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில்,  அத்தனை அவதூறுகளையும் கடந்து கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும் வேட்பாளராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் களமிறங்கினார். மம்தா பானர்ஜியின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற அவர், இப்போது முன்னிலையில் இருப்பதால் அவரும், அவரது ஆதரவாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மொத்தம் 11 வேட்பாளர்கள் களமிறங்கிய இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் அமிர்தா ராய் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 

மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து களம் கண்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை நாடாளுமன்ற குழு தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்திரி பஹரம்பூர் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசப் பதான் வேட்பாளராக களமிறங்கினார். இந்த தொகுதியில் அதிர் ரஞ்சன் சவுத்திரி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யூசப் பதான் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். 

மேதினிபூர் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் களமிறங்கிய நடிகை ஜூன் மலியா 5,321 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் அக்னிமித்ரா பாலை விட முன்னிலை பெற்றிருக்கிறார். இதேபோல், கதல் தொகுதியில் டிஎம்சி சார்பில் களமிறங்கிய மற்றொரு பிரபலமான நடிகர் தேவ் பாஜக வேட்பாளர் டாக்டர் ஹிரன்மோய் சட்டோபாயாயாவை விட 8,323 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கிறார். வாக்குப்பதிவுக்கு பின்பு வெளியான கருத்து கணிப்புகள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாக அம்மாநிலத்தில் இருந்த நிலையில், அவையனைத்தையும் பொய்யாக்கி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை நோக்கி நகரந்து கொண்டிருக்கிறது. இந்த முன்னிலை குறித்து பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் இருந்து பாஜக முழுமையாக துடைத்தெறியப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசாவில் முதன்முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News