எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அசோக் சவாண்! காங்கிரஸ் கட்சியின் மற்றுமொரு விக்கெட் அவுட்!

One More Backlash To Congress: காங்கிரஸில் இருந்து விலக காரணம் சொல்ல வேண்டாமா? தேவையில்லை என்று சொல்லி தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் இருந்து விலகிய எம்.எல்.ஏ அசோக் சவாண்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 12, 2024, 06:30 PM IST
  • தொடர்ந்து பின்னடவை சந்திக்கும் காங்கிரஸ்
  • மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் கட்சியில் இருந்து விலகல்
  • காங்கிரஸில் இருந்து விலக காரணம் சொல்ல வேண்டாமா?
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அசோக் சவாண்! காங்கிரஸ் கட்சியின் மற்றுமொரு விக்கெட் அவுட்! title=

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் காங்கிரஸில் இருந்து விலகினார். அவர் பாஜகவில் சேரலாம் என்ற ஊகங்கள் நிலவிவந்த நிலையில், இன்று காங்கிரஸில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டார். தனது விலகல் குறித்த ராஜினாமா கடிதத்தை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் நானா படேலுக்கு அவர் அனுப்பிவிட்டார். இது தொடர்பான எக்ஸ் வலைதளப் பதிவையும் அவர் பதிவிட்டுள்ளார். 

’ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்’

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் இந்த முடிவை வெளியிட்ட அவர், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதன்பிறகு தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அசோக் சவாண், அதற்கான கடிதத்தை, மாநில சபாநாயகர் ராகுல் நர்வேக்கரிடம் சமர்ப்பித்தார்.

அண்மையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விலகிவரும் நிலையில், அசோக் சவாணின் ராஜினாமாவும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி, தொண்டர்களின் மனதை சலிப்படையச் செய்துள்ளது.  மூத்த காங்கிரஸ் தலைவர்களான பாபா சித்திக் மற்றும் மிலிந்த் தியோரா ஆகியோர் கட்சியில் இருந்து விலகி சில நாட்கள் தான் ஆகின்றன.

மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதியில் உள்ள நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சவான். மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த மறைந்த சங்கர்ராவ் சவானின் மகன் தான் அசோக் தவாண் என்பத் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல்

பாரதிய ஜனதா கட்சியில் சேருவார் என்ற ஊகங்கள் உண்மையாகலாம் என்பதற்கு, மகாராஷ்டிராவின் துணை முதல்வரும், பாஜக உறுப்பினருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது "என்ன நடக்கிறது என்று பொறுத்திருங்கள்" என்று சொன்னது சுட்டிக்காட்டப்படுகிறது

காங்கிரஸ் கட்சிக்கு தொடர் அதிர்ச்சிகள்
அசோக் சவாண் ராஜினாமா தொடர்பாக பேசிய காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் "துரோகிகள்" வெளியேறுவது இதுவரை முன்னேற முடியாமல் இருந்த புதியவர்களுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது என்பதை உணரவில்லை என்று தெரிவித்தார்.

"இதுவரை நண்பர்களும் சகாக்களும் என இருந்தவர்கள், தங்களது தகுதியை விட மிக அதிகமாகக் கொடுத்த அரசியல் கட்சியை விட்டு வெளியேறுமவது துரோகம். வேதனைக்குரிய விஷயம் என்னவென்ரால், கருத்தியல் அர்ப்பணிப்பை விட கவர்ச்சிகரமானதாக இருக்கும் விஷயங்களால் கவரப்படுபவர்கள், பிறகு தங்கள் செயலுக்காக வருத்தப்படுவார்கள் என்று X வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

பெயர் குறிப்பிடாவிட்டாலும் அவர் கூறுவது அசோக் தவாண் பற்றித் தான் என்பது பலருக்கும் புரிந்திருக்கும். மும்பையில் ஆதர்ஷ் வீட்டு வசதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி 2010ஆம் ஆண்டு அசோக் சவான் முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.  2014-19 காலகட்டத்தில் மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராகவும் அசோக் சவாண் பொறுப்பு வகித்தார்..

பாஜகவில் சேருவாரா?
பாஜகவில் சேருவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்த அசோக் சவாண், காங்கிரஸில் இருந்து விலகுவது தனது தனிப்பட்ட முடிவு என்றும், அதற்கு காரணம் கூற விரும்பவில்லை என்றும் கூறினார்.

மேலும் படிக்க | PM Modi: இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் நேரு... மாநிலங்களவையில் பிரதமர் மோடி கடும் தாக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News