BIG NEWS! தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் மீது ஏறிச்சென்ற ரயில்

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து மிகவும் சோகமான ஒரு சம்பவம் வெளிவந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள ஜல்னா ரயில் பாதையின் தடங்களில் தூங்கிக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறிச்சென்றுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 8, 2020, 08:58 AM IST
BIG NEWS! தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் மீது ஏறிச்சென்ற ரயில் title=

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் இருந்து மிகவும் சோகமான ஒரு சம்பவம் வெளிவந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள ஜல்னா ரயில் பாதையின் தடங்களில் தூங்கிக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறிச்சென்றுள்ளது. 

ரயில் நிலையத்தின் மேம்பாலம் அருகே தடங்களில் தூங்கிக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் புலம்பெயர்ந்த நான்கு தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

நமக்கு கிடைத்த தகவல்களின்படி, தொழிலாளர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள். அவர்கள் அவுரங்காபாத் எம்ஐடிசிக்குச் சென்று கொண்டிருந்தனர். நீண்ட தூரம் நடைபயணமாக சென்றதால், இரவில் அவர்கள் ரயில் பாதையில் ஓய்வெடுதிதுள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன் பின்னர், ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர். அதிகாரிகள் தெரிவிக்கையில், சரக்கு ரயில் கடந்து சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு எம்.பி. உஜ்ஜைனில், அதிவேக லாரி சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு பெண் உட்பட மூன்று தொழிலாளர்களை மீது ஏறிச்சென்றதால், சம்பவ இடத்திலேயே அவர்கள் அனைவரையும் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News