நொய்டா இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் தீ விபத்து!!

உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள நொய்டாவில் செக்டார் 24 பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

Last Updated : Jan 9, 2020, 12:09 PM IST
நொய்டா இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் தீ விபத்து!! title=

உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள நொய்டாவில் செக்டார் 24 பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநில நொய்டாவின் செக்டார் 24 பகுதியில் இ.எஸ்.ஐ.சி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. சம்பவ இடத்திற்கு ஆறு தீயணைப்பு வண்டிகள் வர வைக்கப்பட்டு நீர் பாய்ச்சி தீயை அணைத்து வருகின்றனர்.

 

 

 

 

தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனியிலுள்ள பொது மக்கள், நோயாளிகள் என்று அனைவரும் மருத்துவமனையை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News