புதுடில்லி: 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக் அறிவித்தார். அத்தகைய சூழ்நிலையில் முன்னாள் ஹாக்கி வீரர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க தயாராக உள்ளதாக் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. அதே வேளையில் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்து கூட இல்லாமல் பெரும் தோல்வியை கண்டுள்ளது. குறிப்பாக உத்திர பிரதேச மாநிலம் அமோதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரித்தி இராணியிடன் தோல்வி கண்டார்.
தமிழ்நாடு, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை தவிர காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள், உத்திர பிரதேசம், ஒடிசா, வடகிழக்கு மாநிலங்கள் என பல மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இது காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.
அந்த சூழ்நிலையில், கடந்த மே 25 அன்று காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகுவதாகவும், அந்த பொறுப்பில் காந்தி குடும்பத்தை சேராத ஒருவரை, குறிப்பாக தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரையோ அல்லது ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவரையோ நியமிக்குமாறு மூத்த தலைவர்களிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில், ஹாக்கி மற்றும் அரசியலில் அறியப்படும் அஸ்லம் ஷெர் கான், இன்று ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாகவும், அந்த பொறுப்புக்கு காந்தி குடும்பத்தை சாராத ஒருவரை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் தேவை. காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை அளிக்க யாரவது ஒருவர் முன்னோக்கி வரவேண்டும் என நான் நினைத்தேன். அந்த சமயத்தில் தான் ஒரு கடிதத்தை எழுதினேன். நீங்கள் (ராகுல் காந்தி) கட்சித் தலைவராக இருக்க விரும்பினால், அதை தொடரலாம். ஆனால் வேறு யாராவது அதற்கு பொருத்தமானவர் என்று நீங்கள் (ராகுல் காந்தி) நினைத்தால், அதை வரவேற்கிறேன். நேரு குடும்பத்திற்கு வெளியில் இருக்கும் யாராக்காவது காங்கிரஸ் தலைவர் பொறுப்பை கொடுக்க விரும்பினால், அதை எனக்குக் கொடுங்கள். இரண்டு வருடங்களுக்கு எனக்கு இந்த பொறுப்பைக் கொடுங்கள். மீண்டும் ஒருமுறை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என கடிதத்தில் எழுதினேன் என்று முன்னால் மத்திய அமைச்சரான அஸ்லம் ஷெர் கான் கூறியுள்ளார்.
Aslam Sher Khan, ex-union minister&hockey Olympian on his letter to Rahul Gandhi: I wrote when Congress lost elections once again. When Rahul Gandhi said he wants to step down&wants someone else, someone not from his family, to take the charge I thought there's an opportunity. pic.twitter.com/opsE6gxlhy
— ANI (@ANI) June 7, 2019