குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை நிர்வாணமாக ஓட விட்ட மக்கள்!

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் நிர்வாணமாக தெருக்களில் நடக்கவிட்டு தண்டனை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Updated: Dec 3, 2019, 08:38 AM IST
குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை நிர்வாணமாக ஓட விட்ட மக்கள்!

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் நிர்வாணமாக தெருக்களில் நடக்கவிட்டு தண்டனை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

நாக்பூரில் வங்கியின் தினசரி பண வசூல் முகவராக பணிபுரிந்து வரும் வைத்யா (36) என்பவர், நேற்று மாலை தினமும் பணம் வசூல் செய்யும் ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் நான்கு வயது பெண் குழந்தை தனியாக இருந்ததை கண்ட வைத்யா, அக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். 

அந்த குழந்தையின் தாய் திடீரெண்டு வீடு திரும்பியபோது, வைத்யாவின் செயலைக்கண்டு அதிர்ச்சி அடைந்து, கூச்சல் இட்டார். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். பின்னர் இந்த சம்பவம் ஊர்முழுக்க தெரிந்து, அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் குவிந்து, வைத்யாவை நிர்வாணமாக தெருக்களில் நடக்கவிட்டு தண்டனை கொடுத்து, பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, வைத்யா கைது செய்யப்பட்டு, அவர் மீது போக்சோ சட்டத்தின்  கீழ் வழக்கு பதியப்பட்டது.

குழந்தையிடம் தப்பாக நடக்கமுயன்றவருக்கு நிர்வாணமாக நடக்க வைத்து பொதுமக்கள் கொடுத்த தண்டனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மைனர் சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட பின்னர், சில உள்ளூர்வாசிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்ததாக கூறப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 354, 354 A, மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POSCO) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.